உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 போல எண்ணுகின்ருர்களன்ருே! மேலும் இங்கே தேரே விரைந்து போகிறது என்ற உண்மையும் பொதிந்துள்ளதே. இவற்றையெல்லாம் எண்ணிய சாத்தனர், "ஓடுமழை இழியும் மதியம் போல மாட வீதியில் மணித்தேர் கடைஇ காரணி பூம்பொழில் கடைமுகம் குறுக" –4/75–77 எனக் காட்டுகிரு.ர். சந்திரனை இவ்வாறு மழையிடைக் காட்டிய சாத்தனர் மாலைக் காலத்தில் திங்களஞ் செல்வன் தோன்றும் நிலை யினையும் அவன் பொழியும் நிலவினையும் இருவேறு வகைப்பட்ட நல்ல உவமைகளால் எடுத்துக் காட்டுகிருர். "அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்ருேர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசறு விசும்பின் மணிகிறங் கிளர ஆசற விளங்கிய அந்தீக் தண்கதிர் r வெள்ளி வெண்குடத்துப் பால்சொரிவது போல் கள்ளவிழ் பூம்பொழில் இடையிடைச் சொரிய' -6/1-8 என்று காட்டிய உவமைவழித் திங்கள் தோன்றியதை மட்டுமன்றிச் சான்ருேர் கண் தோன்றிய குற்றம் உலகுக்கு எவ்வாறு புலப்படும் என்பதையும் சுட்டுகிருர், தாய், பெற்ற குழந்தைக்குப் பால்ஊட்ட நினைக்கிருள். அக் குழந்தையைக் கண்டவுடன் அவளிடம் பால் சுரக் கின்றது. அதிலும் அக்குழந்தை பசியால் அழுமாயின் அவள் உள்ளத்தினும் மிக்கு விரைவாகப் பால் ஊற்றெழும். இந்த நிலையை எண்ணுகிறர் சாத்தனர். உலகமாகிய சேயினைத் தாயாக ஒம்ப நினைக்கும் மணிமேகலையையும் எண்ணுகிறர். மணிபல்லவத்தில் பெற்ற அந்த அமுத