உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 புகள் ஐந்தாகுமன்ருே! அந்த ஐந்தும் இவர்கள் மேல் சொரியப் பெறுகின்றன.அந்த ஐவகை மலர்களின் மணம் விரவி வீச, அவர்கள் ஐம்புலன் இன்பத்தைப் பெறுகின் ருர் என்று காட்டுகிருர். ஐம்புலன்களையும் அவற்றின் செயல்களையும் விளக்கியும் செல்கிருர். 'கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்றுணர் உடம்பினும் வெற்றிச் சிலைக்காமன் மயிலையும் செவலையும் மாவும் குவளையும் பயிரிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த மலர்வா யம்பின் வாசங் கமழ" -24135-40 என்பன அவர் அடிகள். இவ்வாறு பலவிடங்களில் சாத்த ர்ை வள்ளுவர் குறட்பாக்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும் தம் நூலை நடத்திச் செல்கின்றர். கண்டன சில: காணுதவை பல! “காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன் நாமம் கெடக்கெடும் நோய்' -குறள் 360 என்ற மெய்யுணர்வின் இறுதியாக வரும் குறளை, ஈண்டும் சாத்தனர் தம் நூலின் இறுதியில் மெய்யுணர்வு பெறும் மணிமேகலையை முன்னிறுத்தி உலகத்துக்கு மெய்யொளி காட்ட நினைத்தவர், 'யாம்மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம்' –30]253–254 எனக் காட்டுகிருர், குறட்பாக்களை மட்டுமின்றி அக்குறட் கருத்துக்களை யும் பிற அதிகாரங்களையும் அப்படி அப்படியே எடுத்துக் குறளுக்கு விரிவாகச் சில இடங்களிலும் தொகையாகச் சில இடங்களிலும் சாத்தனர் தம் அடிகளை ஆக்கிச் செல் 9