பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 உலகில் ஆற்ரு மக்கட்கு அளிப்போரே உண்மையில் அறவோராவர். ஆற்றுநர்க்கும் உற்றவர்க்கும் உதவுவது பண்டமாற்ருகவோ பரிமாற்ருகவோ அமையுமே அல் லாது அறமாகாது. இந்த உண்மையைப் புறநானூறு ‘ஆய்' என்னும் கொடை வள்ளலைக் கூறும் காலை, . 'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன்' - புறம் 134 எனக் காட்டுகின்றது. சாத்தனர் இந்த உண்மையினை, “ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்ரு மாக்கள் அரும்பசி களை வோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை' -11192-94 என்று சுட்டிக் காட்டுகின்றர். இவ்வாறே இவருக்கு முன் வாழ்ந்த புலவர்தம் வாய்மொழிகளைப் பொன்னேபோல் போற்றிய தன்மையே இவர் நூலுக்கு உயிரோட்டம் தரு கின்றது. இந்த அளவில் இந்த விளக்கத்தை நிறுத்தி, இனிச் சாத்தனர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய பிற்காலத்தவருள் ஒரு சிலரையும் காண்போம். சாத்தனர் எடுத்தாளப் பெறுகிருர் சாத்தனருக்குப் பின் எத்தனையோ காப்பியங்கள் எழுந்தன; எத்தனையோ சமய நூல்கள் எழுந்தன. அவற் றுக்கெல்லாம் சாத்தனர் வழிகாட்டி என்னுமாறு அமையப் பலப்பல கருத்துக்களையும் சொற்ருெடர்களையும் பின் வந்தவரெல்லாம் எடுத்தாண்டுள்ளனர். அனைத்தையும் காணல் இயலாது. எனவே ஒரு சில கண்டமையலாம். நாம் மேலே உவமைபற்றிக் கண்ட ஒரு தொடரினைக் கொங்குவேளிர் தம் பெருங்கதையில் அப்படியே எடுத் தாண்டு உள்ளமை எண்ணத்தக்கது. -