பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வளர்த்துக்கொள்ள முயன்றன. இந்த நிலையிலேயே அச் சமயங்கள் அடிப்படையில் காப்பியங்கள் உண்டாயின. அவற்றுள் ஒன்றே சாத்தனர் கண்ட மணிமேகலை! வேற்றுச் சமயங்கள் நாட்டினின்ட விரவிய அந்த வேளையிலே இந்தியா நாடு முழுவதும் பரவியிருந்து பின், தமிழ் நாட்டிற்கே உரித்தாயிருந்த சைவ, வைணவ சமயங் கள் தம் நிலைகுலையாவிடினும் ஓரளவு மற்றவற்றெடு கலந்து உறவாடியே நின்றன. இச் சமயக்கொள்கைகள் சிலவற்றைத் தம் சமயத்தோடு பிணைத்த ஆரியர்தம் வைதிக சமயத்தை மக்கள் மாறுபட்டதாகவே மதிக்க வில்லை. மற்றும் பெளத்த சைன சமயங்களையும் தம் சமயங் களின் பகுதிகளே எனக் கொண்டனர். அதல்ை வேற்றுச் சமயங்களாக வந்த பிறவும், தமிழர்தம் சமயங்களே என்னுமாறு தமிழ்நாட்டில் இடம்பெற்று வளர்ந்தன. ஆயினும் அவைகள் தம்முள் மாறுபட்டுத் தமிழ்நாட்டைத் தம் போர்க்களமாக்கிக் கொண்ட காலத்தில்தான் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. முன் பெளத்தம் சிறக்க. அதை வீழ்த்தியபின் சைனம் மேலோங்கிற்று. அதன லேயே பல அறநூல்கள் அக்காலத்தில் உண்டாயின. எனினும் வைதிக சமயம் தமிழ்நாட்டில் கால்கொண்ட பிறகு தமிழ்நாட்டுச் சமயநெறிகளையும் தெய்வங்களையும் ஏற்றுத் தன்னிடத்துக் கொண்டு வளர்ந்த காரணத்தால் மக்கள் அதைப் பின்பற்றத் தொடங்கினர் போலும். எனவேதான் ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் பெளத் தம் சைனம் இரண்டும் நிலைகெட, வைதிக சமயம் மேலோங்கி நின்றதோடு, இன்றளவும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறது. இத்தகைய சமயப் போராட்ட எல்லையில் எத் தனையோ இலக்கியங்கள், சமயங்களின் அடிப்படையில் தமிழில் உண்டாயின. அவை அனைத்தும் கால வெள் ளத்தை நீந்திக் கடக்க முடியாது அழிந்தன. சமயக் கொள்கை பொதியாத அறநெறி பற்றியவை மட்டுமே