பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஒரு கூட்டுச் சமயம் எழக் காரணமானதோடு, அதன் எழுச்சியே தமிழகம் வந்த பெளத்த, சைன மதங்களின் வீழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைகின்றது. இரு சமயங் களின் இயைபைக் கண்டு தானே அன்றி ஏனே பின் சமயக் கணக்கரை வரிசைப் படுத்திய சாத்தனர் சைவனுக்குப்பின் வைதிக வாதியை வைத்துப் பேசுகிருர். மேலும் தன் உள்ளம் பிறருக்குப் புரியாதிருக்கும் வகையில் பூம்புகாரில் முருகன் விழா நடைபெறும் சிறப்பினைச் சில அடிகளுக்குப் பின் இவரே, 'ஆலமலர் செல்வன் மகன்விழாக் கால்கோள் காண்மினே' எனக் கண்டு கிற்குனரைக்' -3/144-145 காட்டுகிருர், இவர் நகைச்சுவையைக் காட்ட நூலில் பல இடங்கள் உள்ளன. அந் நகைச் சுவைகளும் வெறும் நகைச் சுவை களாக மட்டும் அமையாது உயர்ந்த கருத்துக்களை உட் பொதிந்தனவாக- அவர் கொள்கைகளை விளக்குவனவாக இருக்கும். மேலே நகையும் அவலமும் நமக்குக் காட்டிய பொருள்களை உணர்ந்தோமன்ருே! மணிமேகலையைத் தனியாக அனுப்ப வேண்டாமென் பதற்குச் சுதமதி அவள் அழகே காரணம் எனக் காட்டு கின் ருர். அதைக் கூறும் சாத்தனர், ஆடவர் இயல்பு அழகிய மங்கையர் தோள் சேரலே எனவும் இன்றேல் அவர்கள் பேடியரே எனவும் கூறுகின்றர். எனவே அவ் வடிகள் வெறும் வேடிக்கையாக மட்டுமன்றி ஆடவர் இயல்பையும் சுட்டுவனவாக உள்ளன. 'பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ பேடிய ரன்ருே பெற்றியின் நீங்கிடின்' –3123-25 என்பன அவரது அடிகள். இவற்ருல் ஆடவர் இயற்கைத் தன்மை அழகினைத் துய்ப்பதென்பதும் அவ் வியற்கைக்கு