பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கண்டபடி வெட்டுண்ட உதயகுமரன் அருகில் சென்ற மணிமேகலையைக் கூவி நல்லாற்றுப் படுத்துகிறது. : காஞ்சனல்ை வெட்டி வீழ்த்தப்பட்ட உதயகுமரன் உடலைக் கண்ட மணிமேகலை புலம்புகிருள். சென்ற பிறவி யின் கணவன் என்ற கருத்து அவளை வாட்டுகிறது. தன் உள்ளம் உவவனத்தில் ஈடுபட்டதை உணர்கிருள். அங்கேயும் மணிமேகலா தெய்வம் அவள் உள்ளத்தைத் தகைந்தமையை எண்ணுகிருள். தான் காயசண்டிகை வடி வான காரணத்தைப் பேசுகிருள், பின் காதல' எனவே விளிக்கின்ருள். ஆம்! துறவியாகிய மணிமேகலை உள்ளத் தும் தடுமாற்றம் பிறக்கிறது. முன்னும் உவவனத்தில் பிறந் தது. இவற்ருல் சாத்தனர் வினவலிமையை வற்புறுத்தி, அத்தகைய வினைகளும் தெய்வங்களால் நீக்கப் பெறும் உண்மையினை ஆண்டு மணிமேகலா தெய்வத்தை முன் நிறுத்தியும் ஈண்டுக் கந்திற் பாவையை முன்னிறுத்தியும் காட்டுகிருர். தன் காதலன் உடலிடம் செல்ல நினைத்த மணி மேகலையைக் கந்திற்பாவை, 'செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் கினக்கிவன் மகனுய்த் தோன்றிய தூஉம் மனக்கினி யாற்குநீ மகளா யது உம் பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால் கண்ட பிறவியே அல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்" -21/27-35 என்று கூறி அவளைத் தடுத்ததோடு அவள் செயல் அவளுடைய தூய செம்மைப் பணிக்கும் எதிர்கால ஒளி வாழ்விற்கும் இடையூருகும் என்பதையும் வற்புறுத்து கின்றது.