பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 செல்லும் இடத்துக்கும் மக்கள் வாழ்வுக்கும் ஏற்ற வகை யில் தன்னைச் சரிசெய்து கொண்டு வாழும் திறம் பெற்ற மையின்-அவ்வழியில் அச்சமயத்தோர் சென்றமையின்தமிழ்நாட்டுப் பழஞ் சமயங்களாகிய சைவ, வைணவத் தோடு இணைந்து, அவர்தம் தெய்வங்களையும் சிற்சில மாற் றங்களோடு ஏற்றுக்கொண்டு, தன்னையும் நாட்டுச் சமய மாகச் செய்து கொள்ளும் வகையில் முயன்றமையின், பிற இரண்டு சமயங்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றதோடு இன்றளவும் தமிழ் நாட்டில் தன் ஆதிக்கத்தைச் செலுத் திக் கொண்டு வாழவும் செய்கின்றது. தெளிந்த சங்க காலத்துக்குப் பின் வேற்று இனமும் சமுதாய நெறியும் கடவுள் நெறியும் பிறவும் தமிழ்நாட்டில் புகுந்தன என்பது வரலாறு கண்ட உண்மை. அவ்வாறு வந்தவரும் வந்தவையும் தமிழ்நாட்டைத் தத்தம் ஆதிக் கத்தில் கொண்டுவர முயன்ற போராட்டமே தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலத்துக்குக் காரணமாயிற்று. நாம் மேலே கண்ட சமயங்கள் மாத்திரமின்றி, அச் சமயங்களை வளர்ப்போர் மாத்திரமின்றி வேறு பல சமயங்களும் அவற் றின் உட்பிரிவுகளும் தமிழ்நாட்டில் கால்கொள்ளத் தொடங்கிய காலமே அந்த இருண்டகாலம். தமக்கு உரிமை இல்லாத தமிழ்நாட்டில், உரிமை கொண்டாடப் போரிட்ட வரலாறு எத்தகையது என்பதைத் திட்டமாக நம்மால் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், அதனல் உண்டான பெரும் மாற்றத்தை - வேறுபாட்டினைத் திரும்பவும் ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் தெளிவாகக் காணும் தமிழ்நாட்டுச் சமயநெறி, வாழ்வியல் முதலினவற்றை அறிவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இம் மாறு பா டு க ளு ள் பெரும்பாலன சமய அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளன. அரசியல் பற்றிய தெளிவு காணக் கிடைக்கவில்லை. எனவே, இத்தகைய மாறுபாட்டுக்கு நிலைக்களஞன அந்தச் சாத்தனர் காலத்திய சமய நெறிகளைப் பற்றி அவர் நூல் வழியே ஒருவாறு கண்டு நம் பணியை முடித்துக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.