பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 என்பர் ஐயரவர்கள்.அளவை, சைவம், பிரமம், வைணவம் வேதம் என்ற அடிப்படையில் கூறிய ஐந்தையும் ஒன்ருக்கி ஆசீவகம் நிகண்டம் இரண்டையும் ஒன்ருக்கிப் பின் சாங்கியம் வைசேடிகம், பூதவாதம் என்ற மூன்றையும் சேர்த்து ஐந்து எனக் கூறுகின்றர் சாத்தனர். இவற்றெடு பெளத்த சமயத்தையும் சேர்த்துப் பெருங்கதை ஆசிரியர் "ஆற்றுளிக் கிடந்த அறுவகைச் சமயமும் (1136l242),எனக் காட்டுவார். தமிழ்நாட்டில் பலவகையில் இவ்வறுவகைச் சமயங்கள் பகுக்கப்படுகின்றன. இன்றும் தமிழகத்தில் மூன்று நிலையில் அறுவகைப் பெருஞ் சமயங்கள் வாழ் கின்றன. சைவ சமயத்தவர் அறுவகைச் சமயத்தோர்க் கும் அவ்வவர் பொருளாய் இறைவன் நீக்கமற நிறைந் திருப்பதை வேறு வகையில் விளக்கிக் காட்டுவர். எனவே தமிழ்நாட்டுத் தனிக்கடவுளாம் முருகனுக்கு அறுமுகங்கள் உள்ளமை போன்று, த மி ழ் நா ட் டு ச் சமயநிலை என்றும் ஆறு வகையில் அமைந்திருந்த நிலையை உணர்கின்ருேம். இந்நிலையில் மணிமேகலை காட்டிய அந்த அறுவகைச் சமயங்கள் தற்போது நாட்டில் உள்ளனவா என்பதை ஒரளவு அறிந்து மேலே செல்வோம். அறுவகைச் சமயங்கள் நாம் மேலே கண்டபடி சைவம், வைணவம், வேதாந்: தம் (பிரமம்), வைதீகம் என்பவற்றேடு அளவையையும் ஒன்ருக்கி, ஒரு சமய நெறியாகக் காட்டுகிருர் சாத்தனர் என்றலும் அவ்வவற்றின் வேறுபாடு கருதி, ஒவ்வொரு வரையும் தனித் தனியாகவே நிறுத்தி அவரவர் சமயத்தைப் பற்றிப் பேச வைக்கின்றர். எனினும் காலப் போக்கில் இந் நிலைகளெல்லாம் மாறி ஒன்ருக அவர் எண்ணியபடியே ஆயின என்பதைக் காண்கின்ருேம். ஆயினும், உண்மை வகையிலும் சாத்தனர் காட்டிய வழியினும் உற்று நோக் கின் அவற்றுள் பொதிந்த வேறுபாடுகள் புலப்படாமற் போகா. இந்நூல் வழியும் பிற சமய நூல்கள் வழியும் இவற்றை நன்கு தெளிந்து கொள்ளலாம். மேலும் இச்