பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கேச ஐயர் என்பவர் இளங்கோ புத்தத் துறவி எனத் தம் முன்னுரையில் தவருகக் குறிப்பிட்டுள்ளனர். இப்படித் தம்மனம் போனவகையில் இங்கே வாழ்ந்தவர்கள் எழுதிய காரணத்தில்தானே அன்றி சொல்லிய காரணத்தில்ை தானே வெளிநாட்டிலிருந்து தம் சமயம் பரப்பவந்த போப் பாதிரியார் சாத்தனரைச் சைன சமயத்தவர் என்று எழுத நினைத்தார். ஆய்ந்து நோக்கின் இளங்கோவடிகள் சைனர் என்பதும் அவர் அண்ணன் செங்குட்டுவன் சைவன் என் பதும் சாத்தனர் பெளத்தர் என்பதும் அக்காலத்தில் நாட் டில் நிலவிய சமயப் பொறையே அனைவரையும் அன் பால் பிணிக்க நமக்கு நல்ல ஈரிலக்கியங்கள் தந்தது என் பதும் அறிய முடிகிறது. எது எப்படியாயினும் இந்த மணிமேகலையின் ஆசிரி யர் சிறந்த தமிழ்ப் புலவராய் விளங்கினர் என்ற உண்மை அவர் நூலால் மட்டுமன்றி அவர் காலத்து ஒன்றி வாழ்ந்த இளங்கோவடிகளின் பாடல் அடிகளாலும் நன்கு விளங்கு கின்றது. தண்டமிழ்ச் சாத்தன்' (சிலப், பதி. 10) எனவும், 'தண்டமிழாசான் சாத்தன் (காட்சி 40) எனவும், "நன்னூற் புலவன்’ (காட்சி 106) எனவும் இவர் சிலம்பினல் போற்றப் பெறுகின்றனர். எனவே, இவர் சிறந்த தமிழ் அறிஞர் என் பது தேற்றம். மேலும் இவர் சான்ருண்மை மிக்கவர் என் பதும் இவர் வாக்காக உள்ளவற்ருல் உணரக் கிடக் கின்றது. பாடியவை "சீத்தலைச் சாத்தனர்' என்பவர் பாடியவாகச் சங்கத் தொகை நூல்களுள் சில பாடல்கள் உள்ளன. அகத்தில் ஐந்தும் (53, 134, 229, 306, 320), புறத்தில் ஒன்றும் (59), குறுந்தொகையில் ஒன்றும் (154), நற்றிணையில் மூன்றும் (36, 127, 339) ஆகப் பத்துப் பாடல்கள் தொகை நூல் களில் உள்ளன. இவற்றை இயற்றிய புலவர் பெயர்முன் "கூலவாணிகள்' என்ற தொடர் இல்லாமையின் மணி