பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தேற்றம். எனினும் இந்நூல் கி.பி. இரண்டாவது நூற்ருண் டின் எல்லையில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது உண்மை. கயவாகு வேந்தனை வைத்துச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்த காலத்தைக் கணக்கிடுவர். இலங்கை மகாவம்சம் என்னும் இலங்கை மன்னர் வரலாறு கூறும் நூல் வழி அங்கே இரு கயவாகு மன்னர்கள் ஆண் டனர் என்றும், ஒருவன், முதற் கயவாகு, கி. பி. இரண்டாம் நூற்றண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனே செங்குட்டுவன் ஆற்றிய பத்தினிவிழாவில் கலந்து கொண்டவன் என்றும் அறிஞர் முடிவுகட்டியதோடு, அக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றண்டின் முற்பகுதி எனவும் கணக்கிட்டுள்ளனர். , இளங்கோவடிகள் அக் கண்ணகி விழாவிற்குப் பின்பே தன் சிலம்பினைப் பாடி முடித்திருக்க வேண்டும். எனவே சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற் ருண்டின் இடைப் பகுதியில் எழுந்த நூல் என்று கொள்வது பொருந்துவதாகும். மணிமேகலையும் அத்துடன் இணைந்த காப்பியமாதலால் இதுவும் அதே கி. பி. இரண்டாம் நூற் ருண்டின் இடைப்பகுதியில் அல்லது பிற்பகுதியில் தோன்றிய இலக்கியம் எனக் கொள்ளல் பொருந்தும். திரு. கனகசபைப்பிள்ளையவர்கள் இரண்டாம் நூற்ருண் டின் முற்பகுதி எனக் கொள்வர்.' - சிலர் வேதவியாசர், கிருதகோடி போன்ற சமய நூலாக்கியோரைப் பற்றி இம் மணிமேகலையில் கூறப்பட் டிருப்பதால், சாத்தனர் காலத்தால் மிகப் பிந்தியவர் என்பர். எனினும் வேதவியாசரும் மீமாம்சை உரையாகிய கிருதகோடியும் கி. பி. மூன்ரும் நூற்ருண்டுக்கு முன்பே கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றண்டிலே இருந் திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் முடிவு காண் கின்றமையின் அவை எழுந்த காலத்தோ அதற்குச் சற்றே பின்போ அதே இரண்டாம் நூற்றண்டின் எல்லையில் இந்: நூலும் எழுந்ததெனக் கொள்ளலாம். மேலும் மணிமேகலை 3 அல்லது 4-ஆம் நூற்றண்டில் தோன்றிய மகாயான, 1. The great Twin Epics, p. 39. . .