பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 'மும்மலையும் முந்நாடும் முக்கதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்ருே பாமுறைதேர் வள்ளுவர்.முப் பால்' என்ற வெண்பா இவருடையது. எனவே சிலப்பதிகாரம் புகார், மதுரை, வஞ்சியைப் பிணிப்பது போன்றும், மணி மேகலை புகார், வஞ்சி காஞ்சியைப் பிணிப்பது போன்றும் இம் மூன்று என்ற எண் இவர் உள்ளத்தை நன்கு பிணித் துள்ளது. இந்த நிலையில் சங்கப் பாடல்களையும் திரு வள்ளுவ மாலைப் பாடலையும் மணிமேகலையையும் பாடிய புலவர் கூலவாணிகம் செய்த சீத்தலை என்ற ஊருக்கு உரியராகிய சாத்தனரே, இன்று நம் ஆய்வுக்குக்கொள்ளப் பெற்றவர் என்ற அமைவோடு மேலே செல்வோம். இனி மணிமேகலையைப் பற்றி எண்ணுவது பொருந்தும். மணிமேகலை டாக்டர் போப் அவர்கள் தம் மணிமேகலை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் கூறியபடி, சிறந்த இலக்கிய மாக மணிமேகலை விளங்கிய போதிலும், பிறவற்றேடு ஒப்புநோக்கும்போது இந்நூல் மக்களிடம்-சிறப்பாகத் தமிழ் மக்களிடமே அதிகமாகப் பரவவில்லை என்பது கண்கூடு. அவ்வாறு பரவாமைக்கு அவர் காரணம் ஒன்றும் கூருவிடினும் பொதுவாக இலக்கியத் திறன் காணும் நல்லவர்கள் அதன் காரணத்தை ஒரளவு உணர்வார்கள் என்பது தேற்றம். இந்நூலைப் பற்றிக் கனகசபைப்பிள்ளை குறிக்கும்போது இது புத்த சமய நூல்கள் எல்லாவற்றினும் முதலில் உண்டான மூல நூல்கள் தவிர்த்து, எல்லா மொழி யினும் மிகப் பழமை வாய்ந்ததென்றும், பாகியான் யூவான்சுவாங் போன்ற சீன யாத்திரிகர் தம் நூல்களையும் மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கை வரலாற்று நூல்களையும் காட்டினும் மிகப் பழமை வாய்ந்தது என்றும் குறிக்கிருர், மேலும் புத்த சமயம் தமிழகத்தில் கால்கொண்