பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நிலையினையும் தீவதிலகை கூறுகிருள். அந்த எல்லையைக் குறிக்கும்போது வைகாசித் திங்கள் நிறைமதி நாளில் விசாக நட்சத்திரம் பொருந்தும் சிறந்த நாளாகிய-புத்தர் ஞானுேதயம், பரிநிருவாணம் பெற்ற நாளாகிய-அந்தச் சிறந்த நாளில் சுரபி தோன்றும் எனக் குறிக்கின்ருள். இதன்வழி அக்காலத்தில் கார்த்திகையே நட்சத்திரங்களின் முதலாகக் கணக்கிடப் பெற்றமை அறிகிருேம். 'மீனத் திடைநிலை மீனம் என்று விசாகம் குறிக்கப்பெறுவதால் 27-இல் இடைமீன் அது என அறிய முடிகின்றது. எனவே மணிமேகலை காலத்தில் கார்த்திகை முதல் மீனுகக் கணக் கிடப் பெற்றது என அறிகிருேம். இந்நிலை மாறி அசுவனி எப்போது முதல் நட்சத்திரமாகக் கணக்கிடப் பெற்றது. என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். மணிமேகலை அப்பொய்கைக்குச் சென்ற நேரம் அது வாதலின் அப்பாத்திரம் அவள் கையிலடைய, அந்நிலை உணர்ந்த அவள் தன்னை மறந்து புத்த தேவனைப் போற்று கிருள். அருகிருந்த தீவதிலகையும் அவளுடன் வழி பாட்டிற் கலந்ததோடு, அமுதசுரபியின் சிறப்பைக் கூறி, அத்துடன் பசிக் கொடுமைகளை விளக்கி, அப்பசியை நீக்கும் அறமே சிறந்ததெனக் காட்டி, முன்னைப் பிறவியில் நல்லவரை உண்பித்த பயனே அப் பிறவியில் மணி மேகலைக்கு அப் பாத்திரத்தைப் பெற வைத்தது என உணர்த்துகிருள். மணிமேகலை நாவலந்தீவு பசியால் வாடு வதையும் உடன் சென்று உதவவேண்டும் நிலையினையும் உணர்த்திப் புறப்பட்டு விண்வழியே புகார் அடைந்து தன்னை பிரிந்து வருந்தும் மாதவி, சுதமதி மகிழ அமுதசுரபி யொடு நிற்கிருள். - அறவண அடிகள் சாத்தனர் இந்த இடத்தில் பெளத்த சமயப் பெருந் துறவியாம் அறவண அடிகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிருர். கதைப் போக்கில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கூறிவிடாது, கேட்பாக்கு விருப்பம் உண்டாகும்