பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. கொள்வதோடு, அவ்வந்நிலத்து வாழும் மக்கள் வாழ்க்கை நெறிமுறைகளையும் ச மு தாய ப் பண்பாடுகளையும் உணர்ந்து கொள்வதோடு, அவை எவ்வெவ்வாறு என் றென்றும் வாழும் சமுதாயப் பெருநெறிக்கு வழிகாட்டி களாய் - ஒளி விளக்கங்களாய் அமைகின்றன எனவும் அறிந்து கொள்ளுகிருேம். எனவேதான் மணிமேகலையை வாழ்விலக்கியம் என்று போற்றுகிருேம். மணிமேகலையைப் படிக்கும்போது, பாத்திரங்களுட னேயே நாம் செல்லுகிருேம். செல்லும்போது எத் தனையோ நாடுகள், தீவுகள், ஊர்கள், பெருநகர்களில் நம்மை ஈர்க்கும் கட்டடங்களும் பிற சிறப்பியல்புகளும் மிக்கிருப்பதையும் அவற்றுள் வாழும் மக்கள் நிலை, வாழ்க்கை முறை முதலியவற்றையும் நன்கு உணர்ந்து, நாமும் அவர்களோடு ஒன்றிவிடுகிருேம். எனவே, அவ் வந் நாடுகளைப் பற்றியும், அவற்றின் மக்கள் பற்றியும் அறியும் நாம் அவர்தம் நெறிமுறைகளை நம் சமுதாய வாழ்வொடு பிணைத்துக் காணமுடிகிறது. எனவேதான் இன்றைய பேச்சின் தலைப்பாக அரசும் சமூகமும்’ என்பது அமைகின்றது. ΘΤ 60) 6)Ι 6Τ60) 6)] மணிமேகலையில் புகார் விளங்கும் சோழநாடு மட்டு மன்றி அங்கநாடு, உத்தர மகதம், கலிங்க நாடு, காந்தார நாடு, சாவக நாடு, நாக நாடு, பாண்டி நாடு, பூருவ தேயம், மகத நாடு ஆகியவையும் காஞ்சி, வஞ்சி போன்ற தலைநகர் பெற்ற நாடுகளும் பேசப் பெறுகின்றன. அசோதர நகரம், இடவயம், உஞ்சை, கச்சயம், கபிலை, காஞ்சன புரம், காஞ்சி, புகார், கொற்கை, கோசாம்பி, சண்பை, சிங்க நகரம், சித்தி புரம், சேடி, மதுரை, நாக புரம், வஞ்சி, வயனங்கோடு, வாரனசி ஆகிய நகரங் களும் பேசப்பெறுகின்றன. இரத்தின தீவகம், இலங்கா தீவகம், சம்புத் தீவம், சிறுதீவு இரண்டாயிரம், பெருந் தீவு நான்கு, மணிபல்லவம் ஆகியவையும் காட்டப்பெறு