பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69'." எனவும் கூறுவர்.இக்கூற்று உண்மையில் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றன்ருே? இதன்வழி கண்ணகி கடைசிக் காலத்தில் மலைநாடு நோக்கிச் சென்றதும் பொருத்தம் என வும் கொள்ளவேண்டும். காஞ்சியில் இளங்கோவடிகள் தொடாத தொண்டை நாட்டையும் அதன் தலைநகராம் காஞ்சியையும் சாத்தனர் நமக்கு எடுத் துக்காட்டுவதோடு, மணிமேகலை, அறவண அடிகள், மாதவி ஆகியோர் பிற்கால வாழ்வுக்கு இக்காஞ்சியே அடைக்கலம் தந்தது என்பதை உணர வைக்கிருர். அக் காலத்தில் காஞ்சியில் எண்ணற்ற புத்த விகாரங்கள் இருந் தன வென்பதும் பல புத்தர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதும் சைனமும் பரவிய சமயமாய் இருந்த தென்பதும் கற்றர் வாழ் காஞ்சியிலிருந்து சென்று வட இந்திய நாலந்தா பல்கலைக்கழகம் போன்றவற்றுள் பல அறிஞர் கள் பேராசிரியர்களாய் இருந்தனர் என்பதும் வரலாறு காட்டுவன. எனவே இவர்களுக்குக் காஞ்சி அடைக் கலந் தந்ததில் வியப்பில்லை யன்ருே? அது மட்டுமன்றிக் காஞ்சி யும் தொண்டை நாடும் சோழநாட்டின் பகுதியாகவே இருந்தமையானும், அக்காலத்துச் சோழ மரபினைச் சார்ந்தே இளங்கிள்ளி இருந்தமையானும் சோழர் தலைநக ராகிய பூம்புகார் நிலைகெட, அதன் மற்ருெரு தலைநகராகிய காஞ்சியிலே இறுதி நாள்களில் இவர்கள் தங்கினர்கள் என்பதும் பொருந்துவதாகும். இவர்களைப் போன்று எண் ணற்ற புகார் மக்களும் காஞ்சியில் அடைக்கலம் பெற் றிருக்கவும் கூடும். காஞ்சிநகர் மதில் சூழ்ந்த பெருநகர் என்ற உண்மை யைப் பொன்கொடி மூதூர் புரிசை வலங்கொண்டு மணி மேகலை நடுநகர் நண்ணினள் எனக் காட்டுகிருர் சாத்த னர். அந்நகரில் மணிமேகலை வரவை முன்னமே அறிந்த மன்னன், மணிபல்லவத்தைப் போன்ற திட்டு, புத்த பீடிகை, கோமுகிப் பொய்கை முதலியவற்றை இயற்றி 5