உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 புரட்சிக் கவிஞர்: இளங்கோவடிகளோடு சேர்ந்து இலக்கியத்தில் ஒரு புதுத் திருப்பம் கண்டு, புதியதொரு புரட்சியைச் செய்தார் சாத்தனர் என்பதைக் கண்டோம். இத்தகைய மாற்று நெறிக்குச் செல்ல அஞ்சினவராகிய சாத்தனர், அதற்கென அரச குடும்பத்தில் பிறந்த அடிகளாரைச் சார்ந்து சென்ற சாத்தனர், தாமே தனியாகப் பலவகையில் சமுதாயப் புரட்சிகளைச் செய்துள்ளார். இலக்கியத்திலேயே அவர் செய்த மற்ருெரு புாட்சி சமயத்தை இலக்கியத்தில் புகுத்தி யதேயாம். இதுபற்றி மேலேயும் கண்டோம். நாளையும் தேவையாயின் காணலாம். இங்கே அந்தப் புரட்சியைஅதுவரையில் எந்தப் பெரும் புலவரும் செய்ய நினைக் காத-செய்யாத-ஒன்றை மட்டும் சுட்டிச் செல்லலாம். சங்க இலக்கியங்களில்-சிறப்பாக எட்டுத் தொகையில் (பரிபாடல் நீங்கலாக) காணுத சமய உணர்வை இலக்கி யத்தில் சேர்த்து வழங்கும் பான்மையை-முதன்முதல் சாத்தனரே கையாண்டார். பரிபாடலும் முருகாற்றுப்படை யும்கூடத் தத்தம் வழிபடு கடவுளர்களை வாழ்த்தும் முறை யில்-அதிலும் தமிழ்நாட்டுப் பழம்பெருந் தெய்வங்களா கிய சேயோன், மாயோன் ஆகிய இருவரை முன்னிறுத்திப் போற்றும் முறையில் அமைந்தனவேயன்றி, பிற சமயங்க ளொடு ஒப்பு நோக்கி, மற்றவற்றை ஒதுக்கித் தம்முடை யதே உயர்ந்தது எனக்காட்டும் மாற்றுநிலையில் செல்ல வில்லை. மேலும் தமிழ்நாட்டுக்கு முன்பின் அறிமுகமில் லாத வேற்றுச் சமயத்துக்கென்றே கச்சைகட்டி வரிந்து நின்று சமயப் போராட்டம் செய்து, அதையே இலக்கியத் தில் அமைத்த புரட்சி சாத்தருைடையதே ஆகும். பின் ல்ை வந்த சமயப் போராட்டங்களுக்கும் மாருட்டங் களுக்கும் வித்திட்டவர் இச்சாத்தனரேயாவார். வாழ்வி லும் சமுதாயத்திலும் மட்டுமின்றி, இலக்கியத்திலேயே இத்தகைய மாறுபாட்டை உண்டாக்கினர் இவர். இவர் வழியே பின் ல்ை எண்ணற்ற இலக்கியங்கள் உண்டா யின. எனவே இவர்தம் மாற்றத்தால் சமய மாறுபாடு நாட் டில் தோன்றிய நிலை ஒருபுறம் இருக்க, பல சமய இலக்கி