பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'80 ஆபுத்திரன் வரலாறு உலகறிந்த ஒன்று. அவன் கையில் பெற்ற அமுதசுரபியே பின் மணிமேகலையின் கைப்பட்டு இலக்கியத்தில் சிறப்படைகின்றது. ஆபுத்திரன் வழியே-வாயிலாகவே, சாத்தனர் வைதிகர்தம் வேள்விக் கொடுமையைக் கண்டிக்கிருர். பெண்ணினைக் கொண்டே பெண்ணிடம் 'காமங் கொள்ளல் தகாது எனக் காட்டியது. போலவே, அந்தணர்க்குரிய வேதங்களையெல்லாம் நன்கு கற்ற ஒருவனைக் கொண்டே சாத்தனர் வேள்வியைக் கண்டிக்க வைக்கிருர் ஆபுத்திரனை அவர் அறிமுகப் படுத்தும்போது, "மார்பிடை முந்நூல் வனையா முன்னர் நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி ஒத்துடை அந்தணர்க்கு ஒப்பவை யெல்லாம் காத்தொலை வின்றி நன்கனம் அறிந்து 13|23-26 சிறந்தான் என்கிருர், பின் அவனே வேள்விக்குரிய பசுவை பிரித்துச் செல்ல, வேள்வி செய்யும் அந்தணர் அவனைப் பழிக்கின்றனர். 'ஆ கொண் டிந்த ஆரிடை கழிய நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச்சிறு மகனே போக்கப் படுதி' ... 13/42-44 என்று அவனை அவர்கள் பழிக்கின்றனர். ஆபுத்திரன் செல்வமாகிய பசுவின் சிறப்பைக் காட்டி அதன் 'பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும்" -13l53-54 தன்மையை விளக்கினும், அவர்கள் மேலும் அவனை ஆமகன் என்றே பழித்துரைக்கின்றனர். அவர்களுக்குப் பதிலாக, வெவ்வேறு வகையில் வெவ்வேறு விலங் கிடத்துப் பிறந்த பெரியோர்களே அவர்தம் வேதங்களை