பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. நின்று, அவன் தானத்தின் பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிருன், அவனுக்கு ஏதேனும் ஒரு பதவி இந்திர உலகில் தந்து சரிசெய்து விடலாம் என நினைத்திருப்பான். தனக்குப் போட்டியாக வருபவர்களை எத்தனையோ விதத் தில் சரிக்கட்டும் 'நாகரிக உலகில் வாழும் நமக்கு இந்த முறை புதியதன்றே ஆல்ை தம் கடமை உணராது தலைமைக்கும் உரிமைக்கும் போட்டியிடும் இன்றைய அநாகரிகரைப் போலாது, ஆபுத்திரன் கடமைக்காக அறஞ் செய்கின்றவனுதலின் பயன் எதிர்பார்க்கவில்லை. மேலும் சாத்தனர் இந்த இடத்தில் இந்திர உலகத்தின் இழிநிலையைக் காட்ட நினைக்கின்றர்; எழுதுகிருர். "அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வ்ோர் யாவரு மில்லாத் தேவர்கன் ட்ைடுக்கு - இறைவ கிைய பெருவிறல் வேந்தே" -1440-43 என்று அத் தேவநாட்டு இழிநிலையைக் காட்டுகிருர். எனவே, தெய்வ உலக வாழ்வு,உலக வாழ்வினும் மிகவும் தாழ்ந்ததென்பதையும், அந்நாட்டில் நல்லவர் யாரும் இல்லை என்பதையும், அறவோரும் பண்பாட்டாளரும் அவ்வுலகை விரும்ப மாட்டார்கள் என்பதையும் அவ் வாழ்வைச் சிறப்பித்துக் கூறும் அ ந் த ண ர் மரபில் தோன்றிய ஆபுத்திரன் வாயிலாகவே காட்டி நம்மைத் தெருட்டுகிறர். இந்த அடிப்படையில்தான் பின்வந்த பலரும் அத் தேவ உலக வாழ்வை அறவே வெறுத் தொதுக்குகின்றனர் என அறியலாம். அறநெறிப் புரட்சி இந்த அடிப்படையிலே அறம் பற்றிய மற்றெரு புரட்சியையும் சாத்தனர் நம்முன் காட்டுகின்றர். சாத் தனர் காலத்தில் வைதிக நெறி வலுப்பெற்ற காரணத்தால் பார்ப்பார்க் கல்லது பணியறி யலையே' என்ற போற்றலும் அவர்கட்குப் பொன்னும் மணியும் புனைபூணும் அளித்தல் அறமெனக் கொள்ளலும் சிறந்தனவாக ஏற்கப் பெற்றன போலும். இத்தகைய அறவழியில் பொருள் பெற்ற ஒரு வன், திருத்தங்காவில் தான் பெற்றவற்றை, வேதத்தை