பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்துக் காட்டவேண்டும் என்பது அவர்தம் கருத்து; உண்மையும் அதுதான். இலக்கியம் வெறும் சொல்லடுக் குகளால் அன்றி உணர்ச்சி வசத்தால் மட்டும் உருவானது அன்று. அப்படி ஒருவேளை ஏதேனும் இலக்கியம் இவ் வகைகளில் உருவாகுமாயின், அது காலம் கடந்து வாழாது, காலத்தேவன் கைப்பட்டுக் காணுது கழிந்தொழி யும் என்பது உறுதி. இவ்வுண்மை தமிழ் இலக்கியத் துக்கு மட்டுமின்றி உலக மொழிகளில் தோன்றிய அனைத்து இலக்கியங்களுக்கும் பொருந்துவதாகும். இலக்கியம் தான் தோன்றிய காலத்தில், தோன்றிய நாட்டில்-அதன் சமூகத்தின் தன்மையினை - வாழ்வினைவரலாற்றினை அப்படியே படம்பிடித்துக் காட்டவேண்டிய ஒன்ருகும். ஆனால் அத்துடன் அதன் பணி நின்றுவிட வில்லை; அக்காலத்திய சமுதாயப் பண்பாட்டை மட்டும் காட்டுவதோ டமையாது, அச் சமுதாய நெறி அடிப்ப்டை யில் காணும் வாழ்வின் உண்மைகளை வருங்காலச் சமு தாயங்களெல்லாம் உற்றுணரும் வகையில்-தேவையாயின் பற்றிப் படரும் வகையில் - விளக்கிக் காட்டவும் வேண் டும். அந்த இலக்கியம் தோன்றிய நாட்டுச் சமுதாயம் மட்டுமின்றி, உலகில் வாழும் சமுதாயங்களெல்லாம் என் றும் உற்றுணரும் உண்மைகளைக் கொண்டதாயும் அவ் விலக்கியம் அமையவேண்டும், இன்று உலகில் வாழும் இலக்கியங்களுள் ஒருசிலவே இத்தகைய பண்பினைப் பெற்று வாழ்கின்றன. அந்த வரிசையில் வைத்து எண்ணத் தக்க தமிழ் இலக்கியங்களும் உள்ளன. அவற்றின் வரலாற்றைக் காண்போம். i தமிழ் இலக்கியப் பெறுவழி தமிழ் இலக்கிய வரலாற்றுநெறி தெளிந்த நீரோடை போன்றதென்று சொல்ல முடியாது. தமிழ் இலக்கிய நெடுந் தெரு எத்தனையோ மாற்றங்களைப் பெற்று, திருப்பங்களைக் கடந்து, உறழ்ந்தும் பிறழ்ந்தும் சிதைந்தும் செறிந்தும் இன்றைய நிலையில் தன் வரலாற்றை - கடந்த வழிகளை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. தமிழ் இலக்கிய நெடுந்