உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 யின் உருவமாகவே நாகர்தம் குருமகன் நிற்க, உண்மை விளக்கும் ஒளி விளக்காகச் சாதுவன் காட்சி தருகிருன். குருமகன் சாதுவனை ஏற்று உபசரிக்கும் முறை விசித்திரமானது. 'அருந்துதல் இன்றி அலைகடல் உழன்ருேன் வருந்தினன் அளியன் வம்மின் மக்காள் நம்பிக் கிளையோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்' -16/74-77 என அவன் ஆணையிடுகிருன். இன்றைய நாகரிகத்தில் சில பெரும் விடுதிகளில் தங்குவோர் இத்தகைய வரவேற்பினை யும் உபசரிப்பினையும் பெறுகிருர் என்று கேள்விப்படு கிருேமல்லமோ ஆமாம்! இங்கே பணம் தேவை. அங்கே அரசாங்க உபசரிப்பே அப்படி! ஆனல் சாதுவன் மனிதப் பண்பு தூண்டப்பெற்றவன். அவன் வாழ்வின் முற்பகுதி யில் கணிகை ஒருத்தி கைத்துரண் நல்க, வட்டினும் சூதி னும் வான்பொருள் வழங்கி னவனுயினும், பின் தெளிவு. பெற்ற சிந்தையினன்"ஆனமையின்,'வெவ்வுரைகேட்டேன் வேண்டேன்' என அஞ்சி ஒதுங்குகிருன். அதற்கு நாகர் தலைவன் இன்றும் சிலர் பேசுவது போன்று, 'பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு உண்டேர் ஞாலத் துறுபயன்?" -16/80–81 எனக் கேட்கிறன். இதற்குப் பதிலாகச் சாத்தனர், சாது வன்,வாயிலாக, உலகுக்கு - இன்றைய உலகுக்கும்தான் - அறிவுரை பகர்கின்றர். "மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறம் செய்வோர் கல்லுல கடைதலும்