பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 .. நன்னகர் ஆள்வோன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன் ஈங்கிவன் பிறந்த அந்நாள் தோட்டும். இங்குயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது மண்ணும் மரனும் வளம்பல தருஉம் உண்ணின் றுருக்கும் நோய் உயிர்க்கு இல்'-241/69-174 எனக் காட்டுஞ் சாத்தனர் நல்ல அரசியல் உண்மையை உணர்த்துகிருர் பெயல் பிழைப் பறியாது’ என்பதற்கு கிருஷ்ணசாமி ஐயங்கார், போப் ஆகியோர் மழை பெய்தலைத் தவிரவில்லை எனப் பொருள் கொண்டாலும், சாத்தனர் அந்த அளவில் பிழைப் பறியாது' என்பதைக் கூறவில்லை என உணர்தல் வேண்டும். மழை தவருது அளவுக்கு மீறிப் பெருயுமானல் நாட்டில் அவல மன்றே தோன்றும். அண்மையிலும் நாம் அதன் கொடுமையைக் கண்டோமல்லவா! எனவே மழை அடியோடு பெய்யா மல் நின்றும் தவறு செய்யாது; அளவுக்கு மீறிப் பெய்தும் தவறு செய்யாது என வகைப்படுத்தி, நல்லவர் நாட்டில் வாழ்ந்தால் இருவகையாகவும் மழை-வானம் தவறு செய்யாது என்ற உண்மையினையே சாத்தனர் வற்புறுத்து கிருர். இந்த உண்மையை நன்கு விளக்காவிடினும் Lé5&TLG 53 opuff -26.jiāsā “The rains have been reguler எனப் பொருள் கொள்வது பொருந்துவதாகின் றது. டாக்டர் ஐயர் அவர்களும் பிழைப்பு அறியாது என்ப தற்கு தவறுதலை அறியாது’ எனவே பொருள் கொள்கிருர். எனவே, சாத்தனர் நல்லார் வாழும் நாட்டில் இயற்கை எந்த வகையாலும் கெடுதல் செய்யாது என்பதையே வற்புறுத்த விழைகின்ருர் என அறிதல் வேண்டும். அடுத்து நல்லவர் ஆளும் நாட்டில் எந்தவிதமான பிணியும் இருக்கக் கூடாது என்ற பெரும் புரட்சிக் Manimekalai in its Historical Settings. Page 180 Translation by G. U. Pope. Page 55. The story of Manimekalai Page 44. மணிமேகலை-உ. வே. சா. பதிப்பு. பக். 2.