பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 "ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான் எண்பதை உணரான் தருமம்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமம்தன் தேராழிஉற ஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்' - மனுநீதி.44 எனச் சேக்கிழாரால் பாராட்டப்பெற்ற அந்த மனுச் சோழனை அவன் உள்ளம் எண்ணி இருக்கும். தனக்கும் அத்தகைய நல்வாய்ப்பு வந்தும், தானே தன்மகனத் தண்டித்து முறைசெய்து பெருமை தேடிக்கொள்ள முடிய வில்லையே என அவன் உள்ளம் எண்ணியிருக்கும். அதை அவன் வாய்விட்டுப் பேசுவதாகவே காட்டுகிருர் சாத்தனர். 'யான் செயற் பாலது இளங்கோன் தன்னைத் தான்செய் ததல்ை தகவிலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலர் காவல் இன்றெனில் இன்ருல்' "மகனை முறைசெய்த மன்னன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம்செவி இறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையும் காவல் செய் கென்றனன் -22/206-214 என்று காட்டி, அவன் செம்மையுள்ளத்தை விளக்கிய தோடு மாதவர் நோன்பும் மடவார் கற்பும் நல்லா வாழும்-ஆளும் நாட்டில்தான் நிலைக்கும் எனச் சுட்டிக் காட்டுகிருர். காஞ்சி மன்னன் தன் நாட்டுப் பஞ்சத்துக்குக் காரணம் தன் செங்கோல் கோடியமைதானே என ஐயுறு வதை மேலே கண்டோம்.இந்த உண்மையினை இளங்கோ வடிகளும் கூறியுள்ளமை நாமறிவோம். கொற்றவை கோயில் கதவந் திறக்கவில்லை என்பதைக் கேட்டதும் பாண்டியன் வாய்,