பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று பூமியின் காதருகே பயங்கலந்த குரலில் முணுமுணுத்தாள் சித்ரா.

பூமி அதைக் காதில் வாங்கியபடியே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டுச் சித்ராவை ஸ்கூட்டர் அருகிலேயே நின்று கொள்ளு மாறு கூறிய பின் இள நீர் கடையை நெருங்கினான்.

பூமியைப் பார்த்ததுமே இளநீர்க் கடையில் இருந்த டில்லிபாபு குபீரென்று இளநீர் வெட்டும் அரிவாளை உருவிக் கொண்டு பூமிமேல் பாய்ந்தான். பூமியே இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பாராததால் சமாளிக்கத் திணறிப் போனான்.


40

எல்லாவற்றிலிருந்தும் விலகி எல்லா வற்றிலிருந்தும் தப்பித் தன்னை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுயநலமான் ஓர் ஆண்மையாளனை விட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல் எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்பலாம்.


டி’ல்லி பாபு குபீரென்று தன்மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்வான் என்று பூமி எதிர்பார்க்கவில்லை. ஆனால் கத்தியும் கையுமாக பாய்கிற பழைய போர் முறைக்கும், வெறுங்கையோடு எதிர்த்து நிற்க முடிந்த கராத்தே ஜூடோ போர்முறைக்கும் உள்ள ஒரே வேறுபாடு துரிதகதியில்தான் இருந்தது. உடம்போடும், இரத்தத்தோடும் ஊறிப் போயிருந்த அந்தத் துரித கதிதான் அப்போது பூமிக்குக் கைகொடுத்திருந்தது.