பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி]

சருப்பதோபத்திரம் 

நததந தாதா வேகா விசந விரோதா காரா.” (உக)

இதன் பொருள் :-மதக விராகா - மன்மதன்மீது விருப்ப மில்லாதவனே! வாமா - ஒளியையுடையவனே! தநத சகாவே - குபேரனுக்குத் தோழனே ! நத் அதந தாதா - மேகத்தினும்

அதிகமான கொடையாளியே ! விசந விரோத ஆகாரா - துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடை யவனே! நீ வா கா - நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனந் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக (எ - று) -

  • விசன விரோத ஆகாரா- விசனத்திற்கு விரோதமான (அதாவது விசனத்தைப் போக்கும்) ஸ்வரூபத்தை உடைய வனே என்று பொருள் கூறுவாறுமுளர்.

12. சருப்பதோபத்திரம்

சருப்பதோபத்திரம் என்பது, நான்கு புறத்தும் வாயில் களையுடையதாய், நினைத்த வழியாற் செல்லத்தக்கதாய்ச் சமைக் கப்படும் ஒரு வகை வீடு. அது போல எப்பக்கத்திலே தொடங் கிப் படித்தாலும் அச்செய்யுளேயாகும்படி எவ்வெட்டெழுத் துடைய நான்கடிகளுடையதாய் அறுபத்து நான்கு அறைக ளிலேமுதலறை தொடங்கி ஒரு முறையும் இறுதியறை தொடங்கி ஒரு முறையுமாக இரு முறை எழுதி இயையுமாறு பாடப்படுஞ் செய்யுள் சருப்பதோபத்திரம் எனப்படும்.

  • 'ஸர்வதோபத்ரம்' என்பது சருப்பதோபத்திரம் எனத் தற்பவமாய் நின்றது. ஸர்வதஸ் - எப்பக்கத்தும்; பத்ரம் . வாயில் , என்பது அவயவப் பொருள். ،... . ...

இதனிலக்கணத்தை,

"இருதிறத் தெழுதலு மெண்ணான் கெழுத்துடை

யொருசெய்யுளெண்ணெண் ணரங்கினு ளொருங்கமைந் திரிரு முகத்தினு மாலை மாற்றாய்ச் .... - - சார்தரு மாறியுஞ் சருப்பதோ பத்திரம். என்னும் மாறனலங்காரச் சூத்திரத்தானுணர்க.