பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

காடு - காந்தாரம் . ஒரு மாத்திரை குறையக் கந்தாரம் என்றாகி, இசைப்பாட்டினை உணர்த்திற்று. இச்சொல் பின்னும் ஒரு மாத்திரை சுருங்கக் கந்தரம் என்றாகி மிடறு என்று பொருள்படும்.

எகரவொகரங்களுக்குப் புள்ளி வைத்தெழுதுங் காலத்தில் இச்செய்யுளியற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது அறிக.


17. மாத்திரை வருத்தனம் யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின்கணுள்ள எழுத்திற்கு மாத்திரையைக் கூட்டுதலால் வேறொரு சொல்லாகி வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரை வருத்தன மாகும். வர்த்தநம் - அதிகப்படல்.

இதற்கு உதாரணம்:

'அளபொன் றேறிய வண்டதி ரார்ப்பினால் அளபொன் றேறிய மண்ணதிர்ந் துக்குமால் அளபொன் றேறிய பாட லருஞ்சுனை அளபொன் றேறழ கூடலந் தாடுமால்.’’ (௩.க)

இச்செய்யுளின் பொருள் :-அளபு ஒன்று ஏறிய வண்டு அதிர் ஆர்ப்பினால் - மாத்திரையொன்று கூடிய வண்டின் அதிர்ச்சி பொருந்திய ஆரவாரத்தினால், அளபு ஒன்று சிறிய மண் அதிர்ந்து உக்கும் ஆல் - மாத்திரையொன்று கூடிய மண் அதிர்ச்சியுற்றுச் சொரியும் (ஆல் - அசை), அளபு ஒன்று ஏறிய பாடல் - மாத்திரையொன்று கூடிய பாடல், அருமை சுனை - காணுதற்கு அருமையான இனிய சுனையிடத்து, அளபு ஒன்று ஏறு அழகு ஊடு அலைந்து ஆடும் ஆல் - மாத்திரையொன்று கூடிய அழகினிடத்து அலைவுற்று அசையும் ; (ஆல் - அசை) (எ - அ). -

வண்டு - அளி, அளபு ஒன்று ஏறினால் ஆளி என்றாகும். மண் - தரை அளபு ஒன்றேறினால் தாரை என்றாம். ஆளியின் ஆரவாரத்தால் மேகங்கள் அதிர்ச்சியுற்று மழையைச் சொரியு மென்றவாறு. . - . - . . . . பாடல் - கவி. அளபு ஒன்று ஏறிய பாடல் காவியாகும். அழகு வனப்பு. அளவு ஒன்று ஏறிய அழகு வானப்பு ஆகும். வான் அப்பு - ஆகாய கங்கா ஜலம். அருஞ்சுனையிடத்