பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்



லாளிகட்கும், தொழிலாளிகட்கும், உண்மையில் துரோகிகளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலைய வேண்டுமென்று எண்ணினார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணம் இதுவே யாகும்.

தோழர் சிங்காரவேலர், சிறந்த ஒத்துழையாதார். நல்ல வரும்படி அந்த காலத்திலும், காந்தீயத்தில் கொண்டு தனது வக்கீல் வேலையை விட்ட, ஒரு சில சென்னை வக்கீல்களில் சிங்காரவேலர் முதன்மையானவர். காங்கிரசின் பேரால் வக்கீல் வேலையை விட்டு, பின்பு, மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கீல்களில் சிங்காரவேலர் சேர்ந்தவரல்லர். சிறந்த ஒத்துழையாதாராகவே இருந்தார். சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய "கிளர்ச்சிகள்" நான்கு என்று சொல்லலாம். சூளை மில் வேலை நிறுத்தம்; பிரின்ஸ்-ஆப்-வேல்ஸ் பகிஷ்காரம்; சைமன் பகிஷ்காரம்; கானாட்டுக் கோமகன் பகிஷ்காரம்--என்பவைகளில் தோழர் சிங்காரவேலர் முதல் மூன்றிலும் பூரண பங்கெடுத்துக்கொண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில், சக்கோ, வான்சிட்டி என்ற இரண்டு பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப் பட்டு எலக்ட்ரிக் மூலம் கொல்லப் பட்டார்கள். இச்செயலைக் கண்டிக்கச் சென்னை பீப்பில்ஸ் பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டினார் மாகாண சர்க்கார் பயந்து, தனது போலீஸ் படை முழுவதையும் அனுப்பி, அக் கூட்டத்தைப் பயமுறுத்தியது. அன்றையக் கூட்டத்-


10