பக்கம்:சிந்தனை வளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பதைச் சுயநலத்துக்காக விரும்பக் கூடும். சுயநலத்துக் காக வளர்க்கக் கூடும். • நாட்டின் தலைவர்கள், வழிகாட்டுபவர்கள், பிர முகர்கள், எல்லாருமே சிந்தனை ப்ரக்ஞையற்றவர்களாக இருந்துவிட்டால், சிந்தனை வறட்சியை நாடு முழுவதும் சுலபமாகப் பரப்பிவிட அவர்களே போதுமானவர்களா யிருப்பார்கள். இன்று நாட்டில் அந்த முயற்சி மிகவும் தாராளமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக் கட்டுரைகள் சிந்தனை வறட்சியைத் தவிர்ப்பதற்காக w! எழுதப்பட்டவை. துக்ளக் இதழில் நான் எழுதிய இக் கட்டுரைகளை (1978-79 ஆண்டுகள்) இப்போது தமிழ்ப் புத்தகலாயம் நூல் வடிவில் கொண்டு வருகிறது. "அழுத்தமான் இந்தக் கட்டுரைகள் நாட்டுக்கும்

மக்களுக்கும் பயன்படட்டும்.

சிந்தனையைத் துரண்டும் நோக்கத்துடன் திட்ட வட்டமான தலைப்புக்களில் எழுதப்பட்ட இக்கட்டுரை கள் சிந்தனை வளத்துக்குப் பயன்பட்டு அவ்வகை வளத்தைத் தமிழ்நாடு முழுவதும் வளர்க்க உதவக்கூடும் என்பதால் சிந்தனை வளம் என்றே இதன் நூல் வடிவம் இப்போது பெயர் பெறுகின்றது. -

இந்தச் சிந்தனை வளத்தை"த் தமிழில் ஆழ்ந்து சிந்திக்கப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ள தரமான நல்ல வாசகர்களுக்குப் படைப்பதில் பெருமைப் படுகிறேன். r ງູ,

18-4-82 நா. பார்த்தசாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/6&oldid=562248" இலிருந்து மீள்விக்கப்பட்டது