உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 அழகான படம்

நான்காம் வகுப்பிலே கணக்குப் பாடம் நடந்து கொண்டிருந்தது. அச்சமயம், அந்த ஊரில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் குழுவின் தலைவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும், "பையன்களா, நானும் இவரும் ஓர் அவசர வேலையாக வெளியே செல்கிறோம். சிறிது நேரத்தில் திரும்பி விடுவோம். அதற்குள் இதைப் போட்டு வையுங்கள்” என்று கூறி ஒரு கணக்கைக் கொடுத்துவிட்டு, நாடகத் தலைவருடன் கிளம்பி விட்டார் ஆசிரியர்.

எல்லா மாணவர்களும் கணக்கைப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் கணக்கிலே கவனம் செல்லவில்லை. பாதிக் கணக்குடன் நிறுத்திவிட்டுச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த ஒரு தாளை வெளியில் எடுத்தான். அது ஒரு நாடக விளம்பரத்தாள். அதில் அச்சிடப்பட்டிருந்த படத்தைப் பார்த்தான்.

அந்தப் படத்தில் ஒரு தாமரை இருந்தது. தாமரையின் நடுவிலே ஒரு யானை இருந்தது. யானையின் மேலே இந்திரன் இருந்தான். அந்தப் படத்தைப் பார்த்ததும், அதே போல் தன்னுடைய 'சிலேட்'டில் வரைய வேண்டுமென்ற ஆசை அவனுக்குத் தோன்றியது. உடனே வரைய ஆரம்பித்தான். வரைந்து முடிந்ததும் பார்த்தான்! அது அவ்வளவு நன்றாக இல்லை. இன்னும் நன்றாக வரைய வேண்டும் என்று எண்ணினான். உடனே ‘சிலேட்'டின் மறு பக்கத்திலே அதே படத்தை வரைந்தான். படம் போடும் ஆர்வத்தில் அந்தப் பக்கத்தில் இருந்த அரை குறைக் கணக்கையும் அவன் அழித்துவிட்டான்!

சிறிது நேரம் சென்றது. ஆசிரியரும், நாடகத் தலைவரும் திரும்பி வந்தனர்! கணக்கைச் சரியாகப் போட்டிருக்கிறார்களா என்று ஒவ்வொரு மாணவனாகப்

11