பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நல்ல தோழி அந்தச் சிறுமிக்கு வயது ஏழு இருக்கும். அவள் ஆடிப் `ಹಿ೧೯ಕಡ್ಲಿ- விட்டைவிட்டுத் கிளம்பிளுள்; அடுத்த வீட்டை நோக்கி ஒடிஞள்; அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், அங்கே விருந்தினராக வந்திருந்த ஒரு சீமாட்டியைக் கண்டாள். சீமாட்டியும் சிறுமியைப் பார்த்தாள். உடனே அவளை அன்போடு அருகில் அழைத்தாள். சிறிது நேரம் அவளுடன் பேசிப் பார்த்தாள். அவளுக்கு அச்சிறுமியை மிகவும் பிடித்து விட்டது. உடனே அச்சிறுமியிடம், 'நீ என் வீட்டுக்கு வரு கிருயா? என் வீட்டிலேயே நீ இருக்கலாம். அங்கே உன்னைப் போலவே ஒரு பெண் இருக்கிருள். இருவரும் ஆனந்தமாக ஆடலாம்; பாடலாம். உனக்கு வேண்டியதையெல்லாம் நான் வாங்கித் தருவேன். என்ன, வருகிருயா?' என்று கேட்டாள் சீமாட்டி, சிறுமி கொஞ்சம் தயங்கிளுள். பிறகு, அம்மா என்ன சொல்லுவாளோ...' என்று இழுத்தாள். 'வா, உன் அம்மாவைக் கேட்போம். அம்மா ஒத்துக் கொண்டால், நீ கட்டாயம் என் வீட்டுக்கு வந்து விட வேண்டும், சரிதான?’ என்று கேட்டுக்கொண்டே அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்ருள் சீமாட்டி. சிறுமியின் அம்மாவிடம், அம்மா, நான் என் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை சுவீகாரம் எடுத்து வளர்த்து வருகிறேன். அவளுடன் சேர்ந்து படிக்கவும், விளையாடவும் உங்கள் பெண் இருந்தால் நன்ருயிருக்கும். இவளை நான் ஒரு குறையுமில்லாமல் வளர்த்து வருவேன். என்ைேடு இவளை அனுப்பி வைப்பீர்களா?' என்று கே. டாள் சீமாட்டி. 57