உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயவரம் மாரியம்மன் கோவில் தன்னில் எழிலுடைய வாகனங்கள் பலவும் உண்டு. கோயில்தனை நிர்வாகம் செய்த நல்ல குணமுடையோர் எங்களது விருப்பம் போல வெள்ளியிலே செய்தஒரு கேட கத்தை விருப்பமுடன் தந்தனரே விழா நடத்த. மாடுஇழுக்கும் சகடையிலே கேட கத்தை வைத்துஅதிலே பாரதியார் படத்தை வைத்தோம். மலர்களினால் அலங்கரித்தோம். கொடிகள் ஏந்தி ‘வாழ்க! வாழ்க! பாரதியார் நாமம்' என்றோம். சுவாமிவலம் வருகின்ற தெருக்க ளெல்லாம் சுற்றிவந்தோம் பாரதியார் பாட்டுப் பாடி. 126