உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாடுவேன்,
ஊதுவேன்


பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.

குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.

55