பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவா். த.கோவேந்தன், டிலிட்.,

105


துணிவை வரவழைத்துக் கொண்டு, புன்னகை பூத்த வண்ணம் அவற்றைப் “பத்திமிக்கவர்களே, உங்கள் மெலிந்த கைகளிலிருந்து நீங்கள் எப்படிபட்ட ஏமாற்றத்தையும் வேதனையையும் இங்கு நுகர்ந்தீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த உலகிலும் உங்கள் வேதனைகளைக் குறைக்க பணம் வேண்டுகின்றீர்களா?” என்று கேட்டு வரவேற்றான். பின்னர் ஒவ்வொரு கைகளிலும் ஒரு நாணயத்தை வைத்தான். கீழ்ப் பகுதியிலுள்ள கல்லறையில் காணபபட்ட கைகள் மீண்டும் கல்லறைக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் மேற்குப்பகுதியில் தனித்திருந்த அந்தக் கல்லறையில் நீட்டிக் கொண்டிருந்த கை மட்டும் வெளியிலேயே நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் அந்த வழிப்போக்கன். பின்னர் அவன் “இந்த ஒரு நாணயம் உனக்குப் போதாதென்றால் மேலும் தருகிறேன் என்று சொல்லி அந்தக் கையில் நூறு நாணயங்களுக்கு மேலாகக்