பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். (கரு) தேவாமிர்தத்தைச் சாப்பிடுவதானலும், விருந்தாளிகளோடு சாப்பிட வேண்டும். 18. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். - (கரு) பெரியோர் சொல்லும் நீதி வார்த்தைகள், சிறியோருக்குத் தேவாமிர்தம் போன்றதாகும். 19. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. (கரு) செல்வம், புகழ் முதலிய நன்மைகள் உண்டாவதற்கு வழி, தளராத ஊக்கம் உடைத்தா யிருப்பதே. 20. ஒதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். (கரு) படிக்காதவர்களுக்கு அறிவும், நல்லொழுக்கமும் இருக்கா.

(அதிவீரராமபாண்டியன்அருளிய).  
  2. வெற்றி வேற்கைப் பகுதி. 1. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல். (கரு) படித்ததற்கு அடையாளம், பிழை இல்லாமல் பேசுவதாகும்.

2. செல்வர்க்கு அழகு செழுங் கிளை தாங்குதல். (கரு) பணக்காரருக்குப் புகழ் தருவது, மிகுதியான சொந்தக்காரர்களைக் காப்பாற்றுவதாகும். 3. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை. (கரு) அரசருக்குக் கடமையாவது, ஆளும் செங்கோல் ஒழுங்காய் இருக்கச் செய்வதாம். 4. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல், (கரு) மந்திரிக்கு உரிய இலக்கணமாவது, இனி நடக்கப் போகும் காரியத்தை முதலிலேயே அறிந்து அரசனுக்குச் சொல்லுதலாம்.

5. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல். (கரு) சாப்பாட்டிற்குச் சுவை உண்டாக்குவது, விருந்தாளிகளோடு சாப்பிடுவிதாகும். 6.அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அட்ங்கல். (கரு) அறிவுடையவருக்குப் பெருமையளிப்பது, நன்றாகப் படித்துப் பலகருத்துக்களையும் அறிந்து, அடக்கம் உடையவராய் இருத்தலாம். 7. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை. (கரு) எழைகளுக்கு மதிப்பாவது, ஏழ்மைக் காலத்திலும் தாழ்ந்த காரியம் செய்யாதிருத்தலாம். 8. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிள்க்க வேர் வீழ்க் கும்மே. (கரு)ஒருநாள் பழகினும் உயர்ந்தவர் சினேகம்,பெரிய பூமி பிளக்கும்படியாக மரம் வேரூன்றி நிலைப்பதைப் போல நிலைத்து நிற்கும். 9. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே. (கரு) ஒருவனுக்கு உயர்வும், தாழ்வும் தன் செயலுக்கு எற்பவே உண்டாகும். 10. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. - (கரு) சிறுவர்கள் செய்த சிறு குற்றங்கள் எல்லாவற்றையும், பெரியவரா யிருப்பவர் பொறுத்துக் கொள்ள வேண்டியது கடமையாகும்.

11. கற்கை நன்றே கற்கை நன்றே. (கரு)படிப்பது மிக மிக நல்லது. 12.பிச்சை புகினும் கற்கை நன்றே (கரு)பிச்சை எடுத்தாவது செலவு செய்து படிப்பது நல்லது.