பக்கம்:சிறுவர் செய்யுட் சோலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 6. கற்பனைப் பகுதி.

உயர்திரு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது.
1. பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப்

பால்தர நீ என்ன - பக்குவம், செய்வாய் அதனைப் பகருவையோ பசுவே ! உச்சி உடல் நக்கி ஈன்ற உடன் உனது கன்றை உயி ரெழுப்பும் மாயம் ஏதோ ? உரைத்திடுவாய் பசுவே ! (கு) எ பசுவே ! நீ, பச்சையான புல்லைத்தின்று வெள்ளை யான பாலைக் கறக்கின்ரு யல்லவா ? அதற்காக என்ன பக்கு வம் (மாற்று) செய்கின்ருய் ? அதனைச் சொல்லுவாயா? அது போகட்டும் ; (மனிதக் குழந்தைகள் பிறந்த உடனே எழுந்து "நடப்ப்தில்லை)'நீ மட்டும், கன்றுக்குட்டியைப் பெற்ற உடனேயே அதன் உச்சியையும் உடம்பையும் நக்கிக்கொடுத்து, உயிர்ப்பு உண்டாக்கி ஒடியாடி நடக்கச் செய்கின்றயே, அது என்ன மாயம் ? எங்களுக்கும் சொல்லுவாயாக பகருவையோசொல்லுவாயா. ஈன்ற உடன்-பெற்றவுடன். மாயம்-வித்தை. 2. வாய்க் கினிய பால் தருவாய், வயற் குரமும் தருவாய், வண்டி கட்டக் காளையும் , வளர்த் தளிப்பாய் பசுவே ! தாயில்லாப் பிள்ளை கட்குத் தாயாவாய் நோயால் தளர் பவர்க்கு மருத்துவச்சி தானுவாய் பசுவே ! (கு) எ பசுவே ! நீ, வாய்க்கு இனிமையான பால்கொடுப்பாய் , வயலுக்கு எருவும் கொடுப்பாய். வண்டி கட்டி ஒட்டுவதற்

           12

குக் காளைகளைப் பெற்று வளர்த்துக் கொடுப்பாய் , தாய்இல்லாத மனிதக் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதால், நீ தாய்போல் ஆவாய் ; நோயால் இளைத்தவர்க்குப் பால் கொடுத்துக் காப்பாற்றுவதால், நீ வைத்தியம் செய்து காப்பாற்றும் மருத்து வச்சிபோல் ஆவாய். வயற்கு உரம்-வயலுக்கு எரு.

  உயர்திரு புரட்சிக் கவிஞர் - 
  பாரதிதாசன் அவர்கள் 
   அருளியவை.

1. கடல் ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஒரம் எல்லாம் கீரியின் உடல் வண்ணம் போல் மணல் மெத்தை அம்மெத்தைமேல், நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் ; வீழும் ; புரண்டிடும் பாராய் தம்பி. (கு) ஊருக்குக் கிழக்கே கடல் உள்ளது. அதன் ஒரம் எல்லாம் மெத்தை விரித்தாற்போல் மணல் பரவிக்கிடக்கின்றது. அது பார்ப்பதற்குக் கீரிப்பிள்ளையின் உடல் நிறத்தைப் போல் இருக்கின்றது. அம்மணல் மெத்தைமேல் அலைகள் அடிக்கின்றன. அந்த அலைகள், பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளஞ்சிறு வர்களைப்போல, பூரிப்பினுல் மணல் மெத்தையின் மேல் எறும் ; கீழே விழும் ; அங்கும் இங்குமாகப் புரண்டு ஒடும். தம்பீ ! நீ அந்தக் காட்சியைக் காணுவாயாக ! வண்ணம்-நிறம்.

கல்விநிலையம்-பள்ளிக்கூடம்.
     2.சிரித்த முல்லை     
காலைப் போதில் சோலைப் பக்கம் சென்றேன் : குளிர்ந்த தென்றல் வந்தது. வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது. வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
            13