பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 119

"திரியும் கலியுகம் நீங்கித்

தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிருத யுகம்பற்றிப்

பேரின்ப வெள்ளம் பெருகக் களிய முகில்வண்ணன் எம்மான்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்திசை பாடி

எங்கும் இடம்கொண் டனவே" என்றும்,

"இடங்கொள் சமயத்தை யெல்லாம்

எடுத்துக் களைவன போல தடங்கடல் பள்ளிப் பெருமான்

தன்னுடைப் பூதங்க ளேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி நடந்தும் பரந்தும் குனித்தும்

நாடகம் செய்கின் றனவே என்றும்,

"கொன்றுஉயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம் நின்றில் வுலகில் கடிவான்

நேமிப் பிரான்தமர் போந்தார் நன்றிசை பாடியும் துள்ளி

யாடியும் ஞாலம் பறந்தார் சென்றுதொழு துய்ம்மின் தொண்டீர்

சிந்தை யைச்செந் நிறுத்தியே” என்றும் பெருமகிழ்ச்சியுடன் பாடி நம்மாழ்வார் நம்மையும் மகிழ்விக்கிறார்.

திருக்கண்ணபுரம் சேர்ந்தால், வினைகள் கெடும், துயர்கள் போகும், பிணிகள் சாரா, பிறவித்துன்பம் போகும், ஏதம் சாராது என்றும்,

"இல்லை யல்லல் எனக்கேல் இனியென்குறை,

அல்லி மாதர் அமரும் திருமார்பினன், கல்லில் ஏய்ந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர்பாடு சாராவே"

என்றும் பாடுகிறார்.