உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 127

நாரணனே யாவது ஈது அன்றென்பாரார்?" என்றும் அரிய பல கருத்துகளை ஆழ்வார் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது தமிழ்த்தாயின் சொல்லாகும். அதை ஆழ்வார் தெளிவாகக் கூறுவதைக் காணலாம். இன்னும், "பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்,

ஈட்டிய தீயும் இருவிசும்பும் - கேட்ட மனுவும் சுருதி மறைநான்கும் மாயன் றனமாயை யிற்பட்ட தற்பு" என்று ஆழ்வார் உறுதிப்படப் பாடுவதைக் காண்கிறோம். "வணங்கும் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய் இணங்கும்நின்னோரைஇல் லாய்நின்கண் Gమ్మిణతా எழுவிப்பனே"

என்று நம்மாழ்வார் தமது திருவிருத்தத்தில் குறிப்பிடுகிறார். பலவேறு வழிபாடுகளையும் அவற்றினால் ஏற்படும் மனவிகற்பங்களைப்பற்றியும், பல வேறு சமயங்களையும் அவைகளுக்குள் ஏற்படும் பிணக்குகளையும் ஆழ்வார் இங்கு குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வார் “திருவெழு கூற்றிருக்கை” என்னும் அருமையான பாடலைப் பாடியுள்ளார். அதுபற்றி எம்பெருமானார் கீழ்க்கண்ட தனியன் பாடியுள்ளார். "சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால் ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ் ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே" என்று மிக அருமையாகச் சுட்டிக்காட்டிப் பாடியுள்ளார்.

இந்த உலகம் உய்வதற்காகத் திருமங்கைப்பிரான், குடந்தையில் எழுந்தருளியுள்ள ஆராவமுதன் அடிகளி லிருந்துகொண்டு சீர் மிகுந்த திருஎழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழ்ப் பாடல்களில் வேதப்பொருள்களையெல்லாம் சோர்வின்றிச் சொன்னதைக் குறிப்பிட்டு அவனுடைய அருந்துணை நமக்குண்டு என்று எம்பெருமானார் கூறுகிறார்.