பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபநதமும

பவகா ரணிபடிந்து ஆடுவிர் ஆயின் பவகா ரணத்தின் பழம்பிறப் பெய்துவிர் இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே” என்று காப்பியம் குறிப்பிடுகிறது.

"பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு” என்னும் காப்பிய அடிக்குப் "பெரும் மயக்கங்களைப் போக்கும் மலைக்குகை” என்று பொருளாகும்.

மனிதனுடைய அறிவை மயக்கும் சில கேடுகளை நமது அறநூல்கள் குறிப்பிடுகின்றன. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களுள் மயக்கத்திற்குக் கள், காமம், வெகுளி ஆகியவை காரணமாகின்றன.

“காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற

னாமங் கெடக்கெடு நோய்” என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

திருமாலிருஞ்சோலையிலுள்ள மலைக்குகைக்கருகில் செல்லும்போது மனத்தில் நிம்மதியும், ஒருமுகத்தன்மையும் ஏற்பட்டு, பெரும் மயக்கங்கள் தீர்ந்து அறிவுத்தெளிவு ஏற்படுகிறது என்னும் பொருளில் "பெருமால் கெடுக்கும் பிலம் உண்டாங்கு” என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

அப்பிலத்தினுள்ளே மூன்று புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதை மாங்காட்டு மறையோன் குறிப்பிடுகிறார். புண்ணிய தீர்த்தங்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதைச் சிலப்பதிகாரக் காப்பியம் வெளிப்படுத்தி யுள்ளது.

இருப்பினும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, அதனால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்படும் துாய்மையும் மனமகிழ்ச்சியும், மற்றும் மனத்தை ஒருநிலைப்படுத்தி அறிவுத் துறையில் உள்ளத்தைச் செலுத்துவதற்கும் புண்ணிய நதிகளில், குளங்களில், கடல்களில், ஊற்றுகளில், அருவிகளில் இதர பல நீர்நிலைகளில் நீராடுவது நல்ல பலன் தரத்தக்கது என்பதை நமது சமயச் சான்றோர்கள்