பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 211

பாடினாலும் பாடக் கேட்டாலும் தெவிட்டாது இன்பமளிக்கும்.

காலையில் சூரிய உதயமும், மாலையில் சூரியன் மறைவும் தினசரி நிகழ்ச்சிகளாகும். இந்த இருநேரங்களிலும் நாம் நாள்தோறும் சூரிய வழிபாடு செய்கிறோம். இளங்கோவடிகளார் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று பாடினார். அதில் நமக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.

திருமாலை அனைத்து வடிவங்களிலும் வழிபடும் இந்தப் பாடல்கள் தினந்தோறும் பாடத்தக்கவை. நமது உள்ளத்திற்கு நல்லுணர்வையும் நமது அறிவுக்குத் தெளிவையும் ஊட்டத்தக்கவை. இந்த அற்புதமான பாசுரங்கள்மூலம் நம்மாழ்வார் பெருமான் திருமாலை வழிபட நம் அனைவரையும் விரும்பி அழைக்கிறார்.

அப்பாசுரங்களை முழுமையாக இங்கு காண்போம்.

1. "புகழும்நல் ஒருவன் என்கோ

பொருவில்சீர் பூமி யென்கோ திகழும்தண் பரவை என்கோ

தீயென்கோ, வாயு வென்கோ நிகழும்ஆ காச மென்கோ

நீள்சுடர் இரண்டு மென்கோ இகழ்விலிவ் வனைத்து மென்கோ

கண்ணனைக் கூவு மாறே ! 2. "கூவுமா றறிய மாட்டேன் --

குன்றங்கள் அனைத்து மென்கோ மேவுசீர் மாரி யென்கோ

விளங்குதா ரகைகள் என்கோ நாவியல் கலைகள் என்கோ

ஞானநல் லாவி யென்கோ பாவுசீர்க் கண்ணன் என்கோ

பங்கயக் கண்ண னையே ! 3. "பங்கயக் கண்ணன் என்கோ

பவளச்செவ் வாயன் என்கோ அங்கதிர் அடியன் என்கோ

அஞ்சன வண்ணன் என்கோ !