உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இடம் பெற்றுள்ளார்கள். சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் வணிக குலத்தவன் ஆவான் என்பதை அறிவோம். இந்தக் காலத்தைக் காப்பிய காலம் எனச் சில தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்திற்கு அடுத்த காலமாகக் கூறப்படுகிறது. எனவே, இளங்கோவடிகள் காலத்தை இரண்டாம் நூற்றாண்டுக் காலம் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதை மறுத்து, காப்பியத்தின் கற்பனை வளத்தை ஆதாரமாக மனத்தில் கொண்டு, சிலப்பதிகாரக் காப்பியம் எட்டாம் நூற்றாண்டிற்குரியதாகும் எனத் திரு. வையாபுரிப் பிள்ளை போன்ற ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆங்கிலேய ஆட்சியின் தாக்கத்தினாலும் ஐரோப்பிய அறிஞர்களின் தலையீட்டாலும் நமது வரலாற்றுக் காலத்தை கிறிஸ்துவிற்கு முன் (கி.மு.) என்றும் கிறிஸ்துவிற்குப்பின் (கி.பி.) என்றும் கணக்கிட்டு நமது அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதே முறையைப் பின்பற்றி வருகிறார்கள். நமது ஆய்வு முறைகளை நவீனத்துடன் இந்தியப் பாரம்பரிய முறைகளையும் இணைத்துப் புதிய முறைகளை உருவாக்க வேண்டும்.

பெளத்த, சமண இலக்கியங்களுக்கும் கருத்துகளுக்கும் மாறுபட்டு அவைகளுக்கு எதிராகவே சங்கரர், இராமானுஜர், மத்துவர் முதலிய பெரியோர்கள், மகான்கள் பகவத் கீதைக் கருத்துகளுக்கு விளக்கங்கள் எழுதியும், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய வேதாந்தக் கருத்துகள் தோன்றியும் செல்வாக்குப் பெற்றுப் புத்த சமண சமயக் கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

வேதங்களையும் ஆகமங்களையும் வேதாந்தக் கருத்துகளையும் சைவ சித்தாந்தக் கருத்துகளையும் மையமாக வைத்தே முறையே வைணவ, சைவ பக்தி இயக்கங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. அத்தகைய பக்தி இயக்கங்களின் வடிவங்களைக்கொண்டே திவ்யப்பிரபந்தங்களும் சைவத் திருமுறைகளும் தோன்றி வளர்ந்து, மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுப் பரவியுள்ளன.