பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்

இவையைந்து மைந்தும் வல்லார் பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்

மன்னவராய்ப் புகழ்தக் கோரே' என்று பாடுகிறார்.

"கரையெடுத்த கரிசங்கும்" என்று தொடங்கும் பாடல் தொகுதியின் முடிவாக, o

"தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்

வாமனனை மறிகடல்சூழ் வயலாலி வளநாடன் காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை நாமருவி இவைபாட வினையாய நண்ணாவே !” என்றும்,

"வியமுடை விடையினம் உடைதர மடமகள் என்று தொடங்கும் பாசுர வரிசையில்,

"மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை வலிகெழு மதிளயல் வயலனி மங்கையர் கலியன தமிழிவை விழுமிய இசையினொடு ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே” என்றும் பாடுகிறார்.

"வானோர் அளவும்" என்று தொடங்கும் பாடல் வரிசையில், --

"மீனோடு ஆமை கேழலரி

குறளாய் முன்னு மிராமனாய்த் தானாய் பின்னு மிராமனாய்த்

தாமோ தரனாய்க் கற்கியும் ஆனான் றன்னை, கண்ணபுரத்து

அடியன் கலிய னொலிசெய்த தேனா ரின்சொல் தமிழ்மாலை

செப்பப் பாவம் நில்லாவே" என்று பாடுகிறார்.

"கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை" என்னும் அடியைத் தொடக்கமாகக் கொண்ட பாசுர அடிகளின் முடிவாக,