தமிழும் தமிழ்நாடும் 281
ஆழ்வார்களின் தமிழையும் தமிழ்ப்பாசுரங்களையும் தமிழ் மாலைகளையும் பாராட்டிப் பல சாத்துமுறைப் பாசுரங்களிலும், மற்றும் பல அடியார்களின் தனிப் பாசுரங்களிலும் தனியன்களிலும் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள், பேசியுள்ளார்கள். சாத்து முறைப் பாசுரங்களில்
"பொய்கைமுனி பூதத்தார் பேயாழ் வார்தண்
பொருநல்வரும் குருகேசன் விட்டு சித்தன் துய்யகுல சேகரன்நம் பாண நாதன்
தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வையமெலாம் மறைவிளங்க வாள்வே லேந்தும்
மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஒதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே!" ன்னும் அருமையான செய்தியைக் காண்கிறோம்.
நம்மாழ்வார் அருமறைகளைத் தமிழில் இயற்றியதைப் பெருமைப்படுத்தி மதுரகவி பாடியுள்ளதைக் குறிப்பிட்டுக் கூறும் பாடல்,
"இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில் இகழாத பல்லுறவில் இராக மாற்றில் தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக் கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில் அன்பர்க்கே யவதரிக்கு மாயன் நிற்க
அருமறைகள் தமிழ்செய்தான் தானே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல்வழியே நல்வழிகள் துணிவார் கட்கே!" என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறது. மேலும், "விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம்
மண்ணுல கத்தில் மகிழ்ந்தடை கின்றனர் வண்துவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றியநம் பண்ண மருந்தமிழ் வேத மறிந்த பகவர்களே !” என்று ஆழ்வார்களைத் தமிழ் வேதமறிந்த பெரியோர் களாகச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது.