பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 . சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சமய ஊர் வேறுபாடுகளின்றிக் கூடி மகிழும் காட்சிகளாக இருந்து வந்திருக்கின்றன. இவையெல்லாம் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்கும் மேம்பாட்டிற்குமான மனித முயற்சிகளாகும்.

இந்திர விழாவையொட்டிப் பல வேறு விழாக்கள் நடைபெறும் காட்சியையும், பல வேறு கோவில்களைப் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள்.

" விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப்

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை யொருபால் நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்"

ான்று பல வகைக் கோயில்கள், பல வகைக் கடவுளர்கள், பல வகை வழிபாடுகள், வழிபாட்டு முறைகள், பல வேறு விழாக்காட்சிகள் முதலியவைபற்றியெல்லாம் இளங்கோ வடிகள் குறிப்பிடுகிறார்.

விழாக்களின் இசை நிகழ்ச்சிகளில் கூத்தர், தோல் கருவியாளர், யாழிசைப்புலவர், குழலிசைப் புலவர், வாய்ப் பாடகர்களான பாணர் முதலியோரும் கலந்து கொள்கிறார்கள் என்பதையும் காப்பிய அடிகள் விவரித்துக் கூறுகின்றன. மனித வாழ்க்கையில் இசைக்கும் இசைப் பயிற்சிக்கும் இசைக் கருவிகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தைச் சிலப்பதிகாரக் காப்பியம் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. மதுரைப் பயணத்தில் :

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரைக்குப் புறப்பட்டபோது,