பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 83

குன் றெனத் திகழ் மணிமாடங்கள் சூழ்ந்த கற்றார் மறைவானர் வாழும் திருப்பேரூர் என்று நம்மாழ்வார் பெருமான் சிறப்பித்துப் பாடுவதைக் காண்கிறோம்.

மனிதன் தனது கர்ம பலத்தால், உழைப்பின் திறத்தால், அறிவின் மேன்மையால், நீண்ட வாழ்க்கைப் பயனத்தின் விரிவான அனுபவத்தால், மனிதர்களுக்குள் கூட்டான (முதாயச் செயல்பாடுகள் மூலம் கலந்துரையாடல் மூலம், கடிச் செயல்படுவதன் மூலம், சேரும் அனுபவத்தினால் தனது சிந்தனையை, அறிவை வளர்த்துத் தனது செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறான். **

நீண்ட அனுபவத்தின் மூலம் அறிவு வளர்ச்சி பெற்று, இயற்கைச் சக்திகளையும் வளத்தையும் மேலும் மேலும் அதிகமாகப் பயன்படுத்தி ஆய்வு செய்து நாட்டு வளத்தை ஒன்று பலவாகப் பெருக்குகிறான். விரிவான நிலப்பகுதிகள் விளைநிலங்களாயின. நெல்லும் கரும்பும் தென்னையும் கமுகும் மா பலா வாழையும் சந்தனமும் தேக்கும் இன்னும் எ ன் னற்ற பொருள்களும் விளைந்து குவிகின்றன. மனிதனோடு சேர்ந்து பறவைகளும் ஆடுமாடுகளும், கால்நடைகளும் இதர பல விலங்குகளும் மற்றும் பல ம யிரினங்களும் மனிதனுக்கு நண்பனாகி நாடு நகரங்களின், மக்கள் வாழ்க்கையின் வளத்தைப் பெருக்கின. ஏரிகளும் குளங்களும் கண்மாய்களும் கால்வாய்களும் அணைகளும் பொழில்களும் தடாகங்களும் இதர நீர்நிலைகளும் பெருகி நாட்டையும் சமுதாயத்தையும் வளப்படுத்தியிருக்கின்றன.

கோவில்கள், குளங்கள், மாடங்கள், மாளிகைகள், கோட்டைகள், கொத்தளங்கள், நீண்ட மதில்கள், சுவர்கள், வீடுகள், ஊர்கள், நாடு நகரங்கள் பெருகி மனித நாகரிகம் வளர்ந்துள்ளது. ஆடல் பாடல்கள், கூத்துகள், நாடகங்கள்,

கவிதைகள், காவியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள், சாத்திரங்கள் பலவும் படைக்கப்படும் மனிதனுடைய மகிழ்ச்சியும் அறிவும் அதிகரித்து வந்துள்ளன.

மக்கள் சமுதாயத்தின் இந்த மகத்தான வளர்ச்சிப் பாதையில், அந்த வளர்ச்சிக்கு எதிரான தடைகள், போர்கள்,

ந. சங்கள், இடையூறுகள் முதலிய பலவும் நிகழ்ந்து