பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும்

இளங்கோவடிகளார் தமது காப்பியத்தின் மூலமும், ஆழ்வார்கள் தங்களுடைய இனிய பாசுரங்கள் மூலமும் மக்களுக்கு மிகவும் அவசியமாகக் கருதும் நெறிமுறைகளை யும் அறிவுரைகளையும் எடுத்துக் கூறி மக்களுக்கு வழி கட்டியுள்ளார்கள். நெஞ்சை அள்ளும் கவிதைகள், கதைகள், பகாங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்கு வழிகாட்டி அவர்களை நெறிமுறைப்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றி முன் எடுத்துச் செல்வதற்கு உதவுவதே இலக்கியங்களின் பொது நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. அந்தச் சீரிய நோக்கங்களை மனித நேயத்துடன் எடுத்துக் கூறுவதை நாம் லெப்பதிகாரக் காப்பியத்திலும், திவ்யப்பிரபந்தப் I п ~ыпiызһGohsy/Lһ நன்கு காணலாம். -

இல்வாழ்க்கையின் சிறப்புப்பற்றியும் இல்லறத்தாரின் 'பிய கடமைகள் பற்றியும் இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் பல இடங்களிலும் சிறப்பித்துக் கூறுகிறார்கள். தன் கற்றத்தைப் போற்றுதல், அறவோரைப் போற்றி ப பித்தல், விருந்தினரை உபசரித்தல் முதலியவை இல்வாழ்க்கையின் சிறந்த பண்புகளாகும் என்று காப்பிய அடி கள் விவரிக்கின்றன.

" மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்சை வேறுபடு திருவின் வீடுபெறக் கான உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணர்க" என்பன காப்பியத்தின் செய்யுள் அடிகளாகும். இவற்றின் பொருள் மறக்க முடியாத, ஒதுக்கிவிட முடியாத, மிகவும்

நெருக்கமான உறவினர்கள் (அவர்களுள் குழந்தைகளும்

  • ut