பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

விட்டனர். அத்தகைய கேடுகளிலிருந்து மக்களையும் சமுதாயத்தையும் நாட்டையும் உலகையும் பமீட்பதற்கு மீண்டும் மீண்டும் நாம் நமது நல்ல சாத்திரங்களின், இலக்கியங்களின் நல்ல சாரத்தினைக் கிரகித்துக்கொள்ள முயல வேண்டும்.

புகார்க் காண்டம் மனையறம் படுத்த காதையின் வெண்பாவில்,

" தொலையாத இன்பமெல்லாம் துன்னினர் மண்மேல்

நிலையாமை கண்டவர்போல் நின்று” என்று அடிகளார் முடிக்கிறார்.

பூமியில் மனித வாழ்க்கையில் இளமை, செல்வம், உயிர், உடம்பு (யாக்கை) ஆகியவை நிலையாதன. எனவே, அவை இருக்கும்போதே எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்னும் எண்னத்துடன் கோவலனும் கண்ணகியும் இனைந்து இன்புற்று இல்வாழ்க்கை நடத்தினர் என்று உரையாசிரியர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள்.

இளமை, செல்வம், யாக்கை என்பவை நிலையானவை அல்ல. அவை மாறிவிடும் என்பது பொது நியதியாகும் என்பதும் உண்மைதான். அந்த நிலையாமை என்னும் நிலையிலிருந்து அக்காலத்திற்குள்ளேயே வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்னும் கருத்தும், அதற்கு நேர் எதிர்மறையாக இந்த நிலையா வாழ்க்கையை நம்புவது மடமை என்று கூறி வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூனத் துண்டுவதும் உண்டு. அது மடமையாகும். இளமை, செல்வம், யாக்கை என்பவை தற்காலிகமானவை என்பதால் அக்காலத்திற்குள்ளேயே மனிதன் அறவழியில் நின்று தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும், பிறருக்குக் கேடில்லாத வகையில் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதும் இங்கு அறிய வேண்டியவையாகும்.

உலகில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஆற்றுநீர் ஒடிக்கொண்டேயிருக்கிறது. காற்று அசைந்து கொண்டேயிருக்கிறது. சூரிய சந்திர தோற்றங்கள் மாறிக்