பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” உடல் ஊனமுற்றோருக்கும் தொழுநோய் முதலிய கொடிய நோய் பீடித்தவர்களுக்கும் உதவி செய்து அவர்களுடைய துயர் துடைப்பதற்கும் தணிப்பதற்கும் ஆவன செய்ய வேண்டியது சமுதாயத்தின் கடமை என்பதுபற்றி இன்றுங்கூட சிந்திக்கப்படுகிறது. சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் இத்தகைய சமுதாயச் சிந்தனை முன் வைக்கப் பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

கூன், குருடு, குள்ளர், ஊமையர், செவிடர், தொழு நோயாளர் ஆகியோர் மூழ்கி, நீராடி, வலம் செய்தால், அவர்களுடைய குறைகளை நீக்கவல்ல பொய்கையினை யுடைய இலஞ்சி மன்றம் அப்புகாரில் இருந்தது.

" வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர்

நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூனிக் கடுநவைப் பட்டோர் சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” வஞ்சனையால் சிலர் தங்களுக்கு வேண்டாதோருக்கு மருந்து கொடுத்து அதனால் பித்தேறி அவதிப்படுவோரும், நஞ்சை உண்டு அதனால் அவதிப்படுவோரும், நச்சுப் பாம்புகளினால் கடியுண்டு அவதிப்படுவோர்களும், பிதுங்கிய கண் களைக் கொண்ட பேய்கள் பிடித்து அல்லல் உற்றோர்களும் சுற்றி வந்து தொழுதால் அவர்களுடைய துயர்கள் நீங்கும்படியாக உள்ள நெடிய கல்லால் நாட்டப் பட்டுள்ள தீப ஒளியுடைய நெடுங்கல் நின்ற மன்றமும் புகார் நகரில் இருந்தது.

" தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர்

அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காதம் நான்கும் கடுங்குர லெழுப்பிப் பூதம் புடைத்துனும் பூதச் சதுக்கமும்”