பக்கம்:சிலம்பின் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனையறம்படுத்த காதை

17


 நற்றவம் மிக்க இல் வாழ்க்கையை நடத்தினாள். இவ் இன்ப வாழ்க்கை சில ஆண்டுகளே நீடித்தது.

அவர்கள் அடைந்த இன்பத்துக்கு எதனை உவமையாகக் கூறுவது? காமத்தில் கலந்து மகிழும் பாம்புகளைத் தான் உவமை கூற முடியும்; இவர்கள் நிலையாமையைக் கண்டு அது பயன்படக்கழிய வேண்டும் என்ற கொள்கை உடையவர் போல் வாழ்க்கையை நேசித்தனர். இடையறாத மகிழ்வு கண்டனர்.


3. மாதவியுடன் தொடர்பு
(அரங்கேற்று காதை)

மாதவி

ஆண்டுகள் சில கழிந்தன; அதற்குள் புதிய தொடர்பு எழச் சூழல்கள் உருவாயின.

நாட்டிய அழகி மாதவி ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் தேர்ந்தவள் ஆயினாள். அவள் ஊர்வசி மரபில் வந்தவள் என்று பேசப்பட்டது. அதற்கு ஒரு கதையும் கூறப்பட்டது.

இந்திரன் அவையில் சந்திரன் எனத் திகழ்ந்த சயந்தனைக் காதலித்த நடனமாது ஆகிய ஊர்வசி நாட்டியம் பிறழ்ந்தாள். அதனால் அவள் மண்ணுலகில் பிறக்கச் சாபம் பெற்றாள். அவள் சாபம் இங்கு இப்புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது; அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது. என்பர். அத்தகைய சிறப்பு மிக்க ஊர்வசி புகார் நகரில் பிறந்தாள். அவ்வழி வந்தவள் மாதவி என்று சிறப்பித்துப் பேசப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/18&oldid=961075" இலிருந்து மீள்விக்கப்பட்டது