உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் о 159 அருணாசலம் பணிவுடன் வேண்டிக் கொண்டான், ஒரு நாள். மாதவனுக்கு அந்தக் கடையில் பற்றுவரவு இருந்தது. அருணாசலம் கேட்கும் போது ரொட்டி கொடுக்கும்படி அவன் ஏற்பாடு செய்துவிட்டான். அருணாசலம் மாதவனைக் காணும் போதெல்லாம் இன்றிப் புன்னகை காட்டுவதும் வழக்கமாயிற்று. ஒரு மாதம் சென்றது. கடைக்காரன் மாதவனிடம் கணக்குக் கூறினான். இந்த மாதம் உங்கள் கணக்கு ரொம்ப அதிகமாகி விட்டது, ளார், இருபது ரூபாய் வரை வந்து விட்டது. சீக்கிரம் பணம் தர ஏற்பாடு செய்யுங்கள் என்றான். மாதவன் கணக்கைப் பார்த்தான். கடைக்காரன் பொய்யா சொல்லப் போகிறான்? ரொட்டி தான் கணக்கில் பேரளவுக்கு வளர்ந்திருந்தது! அவன் பெருமூச்செறிந்தான். வேறு வழி இல்லை. 'இனிமேல் அவனுக்கு ரொட்டி கொடுக்க வேண்டாம் என்று கடைக்காரனிடம் சொல்விட்டு, துயர நெஞ்சோடு நடந்தான். 'இப்பொழுது இருபது ரூபாய் வேண்டும். கடைக்காசனுக்கு உரிய பணத்தைக் கொடுத்தாக வேணும். இல்லாவிட்டால் இனி அவன் எப்படி மாதவனுக்குத் தேவையான சாமான் களைக் கொடுப்பான்? ஒவ்வொருவன் அலட்சியமாக நூறும் ஐநூறும் செலவு செய்கிறான். சூதாட்டத்திலும், ரேஸிலும் ஆயிரக் கணக்கில் அள்ளி வீசுகிறார்கள். நானோ ஒருவன் வயிற்றுக்கு ரொட்டி வாங்கிக் கொடுக்க யோசிக்கிறேன்’ என்று வருத்தம் பட்டான் அவன்.