உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரகாண்டச்

22
முதலில் ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வது - பின்பு, ஒவ்வொரு படத்திலும் அத்தலைப்பு தொடர்பான பாடல்களைத் தேடிப் பிரித்து எடுப்பது - அடுத்த மற்றொரு தலைப்பு எடுத்துக் கொள்வது- அதற்கு உரிய பாடல்களை ஒவ்வொரு படலமாகப் படித்துத் தேடிப் பிரித்து எடுத்துக் கொள்வது-இப்படியே எல்லாத்தலைப்புகட்கும் ஒவ்வொரு படலமாகப் படித்துப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டே போய்ப் பின்பு அத்தலைப்பு தொடர்பான செய்திகளைத் தொகுத்து எழுதுவது - என்ற முறையில் யான் நூலை அமைத்துள்ளேன். இஃதல்லவா உண்மையான திட்டமிடுதலாகும்? போதிய பட்டறிவு இல்லாத ஏதோ ஒரு குழந்தை, நான் திட்டமிடவில்லை என மட்டப்படுத்தியுள்ளதே! என்ன வியப்பு - இல்லையில்லை - என்ன கொடுமை. நடுநிலமையோடு தீர்ப்பு வழங்கும்படித் தமிழ் அறிஞர்களைத் தலை தாழ்த்தி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள்:

என் கருத்துகள் மட்டமானவையாம்; பயன் இல்லாதவையாம்; புதிய அணுகு முறை இல்லையாம். இக்குற்றச் சாட்டுகளுக்கு உரிய பதில்களாவன;-

அணுகுமுறை:

பதினாறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேனே - அந்த அந்தத் தலைப்புவாரியாகப் பாடல்களை முதல் படலத்திலிருந்து இறுதிப் படலம் வரையும் பார்த்துத் தேர்ந்தெடுத்து விளக்கம் எழுதியுள்ளேனே - இதுவே புதிய அணுகு முறையல்லவா? இவ்வாறு எழுதப் பெற்ற நூல்கள் வேறு எத்தனை உள்ளன? என் கருத்துகள் மட்டமானவை-பயன் இல்லாதவை என்பதிலிருந்தே, கம்பர் கருத்துகட்கு மேலே யானும் சில புதிய கருத்துகள் தெரிவித்துள்ளேன்