பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூறாவளி

1982- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - டாக்டர் ஔவை து. நடராசன் பலர் நடுவில் கூறியது: 'புதுச்சேரிக்குச் சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் மூன்று. (1) அரவிந்தர் ஆசிரமம் (2) பிரஞ்சுக் கலைக்கழகம் (3)சு. ச. வின் இல்லம்.

1983- தமிழகப் புலவர் குழுவின் வெள்ளிவிழா சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோது, சு. ச. விற்குத் 'தமிழ்ச் சான்றோர்' என்னும் பட்டம் கொடுக்கப்பட்ட காலை, சு. ச. வைப்பற்றி அவையோர்க்கு அறிமுகப்படுத்த டாக்டர் ந. சஞ்சீவி கூறியது: சு. ச. ஒரு குட்டி மாநிலமாகிய புதுச்சேரியில் இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய தமிழ்ப் பணிகளைச் செய்து கொண்டுள்ளார்.

சில ஆண்டுகட்கு முன் புதுச்சேரிப் பெண்கள் கல்லூரிக் கட்டடத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் டாக்டர் முத்து சண்முகம் பிள்ளை கூறியது; 'இங்கே சு. ச. ஓர் ஆராய்ச்சியாளர் தான் உள்ளார்' .

அதே கட்டடத்தில் பின்னர் நடந்த ஒரு விழாவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பெருமாள் வந்தபோது, இவர்தான் சு. ச. என்று அறிமுகப்படுத்தியதும் அவர் சு. சவைக் கட்டித் தழுவிக் கொண்டார். கூட்டம் முடிந்ததும் மாடிப்படியில் இறங்கிச் சென்றபோது, சு. ச. தமிழுக்கு எவ்வளவோ தொண்டு செய்துவிட்டு நடக்க முடியாமல் நடக்கிறார் என்று டாக்டர் பெருமாள் கூறினார். (சு. ச. மூளைக் கட்டிப் பிணியாளி).


1973-இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாடு புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்து உதவுமாறு டாக்டர் ச. அகத்தியலிங்கம் சு. ச. வினிடமே வந்தார்,