பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

பொழிவுகள் செய்துள்ளேன். விரிவஞ்சி அவற்றுள் மூன்று சொற்பொழிவுகளைப் பற்றி மட்டும் இவண் தெரிவிக்கிறேன்.


{{gap}(i) 1941-ஆம் ஆண்டு, சங்கராபரணி ஆற்றின் கரையிலுள்ள கொடுக்கூர் என்னும் சிற்றூரில் (கிராமத்தில்) உள்ள திருமால் கோயிலில் 'ஒரு நாள் பழகிய உத்தமன்' (குகன்) என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினேன், சென்னையில் வழக்கறிஞர் தொழில் புரிந்தவரும் பின்னர் மலேசியாவிற்குச் சென்று இந்தியர் நலக் கழகத்தின் தலைவரா யிருந்தவருமான உயர்திரு க. இராமநாதன் செட்டியார், பி.ஏ., பி.எல். அன்று தலைமை தாங்கினார். யான் பேசி முடித்ததும், ஐயங்கார முதியவர் ஒருவர் எழுந்து, 'இந்தப் பிள்ளை பேசியதைப் பற்றி யான் சிறிது சொல்லவேண்டும்' என்று தலைவரிடம் ஒப்புதல் கேட்டார். "அவர் இளைஞர்; அவர் பேசியதில் குற்றம் குறை இருப்பினும், பெரியவர்களாகிய நாம் மன்னித்துவிட வேண்டும்; தயவு செய்து நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம்" என்று தலைவர் பெரியவரைக் கேட்டுக்கொண்டார். 'நான் அவரைப் பாராட்டப் போகிறேன்' என்று முதியவர் கூறினார். பின்பு தலைவர் ஒப்புதல் அளித்தார். முதியவர் என்னைப் பாராட்டிப் பேசியவற்றிலிருந்து ஒரு தொடரை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: "நான் பணக்காரனாக இருந்திருப்பின் இந்தப் பிள்ளைக்குக் கனகாபிஷேகம் (தங்கக் கட்டிகளைத் தலை மேலே கொட்டுதல்) செய்திருப்பேன்" - என்பது அந்தத் தொடர்.


தலைவர் இந்த நிகழ்ச்சியை, 1941 டிசம்பரில் சீர்காழியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாமன்ற ஆண்டு விழாவிலும் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்.


(2) 1943-ஆம் ஆண்டு கஞ்சனூர் என்னும் சிற்றூரில் 'கம்பர் கண்ட திருமணம்' என்னும் தலைப்பில் யான்